Advertisment

என் பெருமை, மகிழ்ச்சி... 8 மாத கர்ப்பிணியாக பிரபல சீரியல் நடிகை : போட்டோஷூட் வைரல்

2009-ம் ஆண்டு முதல் சின்னத்திரையில் நடித்து வரும் ஸ்வேதா பண்டேகர் சன்டிவியின் மகள் சீரியல் மூலம் அறிமுகமானார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shwetha Bendakar

சந்திரலேகா சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகர்

பிரபல சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகர் தற்போது 8 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில், சமீபத்தில் அவர் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ஆழ்வார் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்வேதா பண்டேகர். இந்த படத்தில் கல்பனா என்ற கேரக்டரில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து வள்ளுவன் வாசுகி, பூவா தலையா, நான் தான் பாலா உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஸ்வேதா பண்டேகர் கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூலோகம் படத்தில் நடித்திருந்தார்.

publive-image

மேலும் 2009-ம் ஆண்டு முதல் சின்னத்திரையில் நடித்து வரும் ஸ்வேதா பண்டேகர் சன்டிவியின் மகள் சீரியல் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சந்திரலேகா தொடரில் நடித்தார். இந்த சீரியலில் 2 வேடங்களில் நடித்த ஸ்வேதா பண்டேகர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றிருந்தார். மேலும் ஜீ தமிழின் லட்சுமி வந்தாச்சு என்ற தொடரிலும் நடித்துள்ளார்.

publive-image

பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ள ஸ்வேதா பண்டேகர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பல விளம்பர படங்களில் நடித்துள்ள ஸ்வேதா பண்டேகர், சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இருந்த மால் மருகா என்பரை 10 ஆண்டுகள் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

publive-image

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக கூறிய ஸ்வேதா பண்டேகர் இது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் ஸ்வேதா பண்டேகர் தனது கணவருடன் இணைந்து போட்டோஷூட் நடத்தியுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment