Advertisment

சித்துவுக்கு ஸ்ரேயா மேல அப்படி என்ன கோபம்? இப்படி தூக்கி வீசிட்டாரே... வைரல் வீடியோ

சித்து விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் லீடு ரோலில நடித்து வருகிறார். இந்த சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேறி வருகிறது.

author-image
WebDesk
New Update
சித்துவுக்கு ஸ்ரேயா மேல அப்படி என்ன கோபம்? இப்படி தூக்கி வீசிட்டாரே... வைரல் வீடியோ

ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறிய நட்சத்திர தம்பதி சித்து – ஸ்ரேயா. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் திருமணம் என்னும் சீரியலில் இணைந்து நடித்த இவர்கள், தற்போது நிஜ வாழ்விலும் திருமணம் செய்துகொண்டனர்.இவர்கள் திருமணம் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, திருமணம் சீரியலில் இவர்கள் இருவரும் திருமண கோலத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் ரியல் ஃலைப்பில் இவர்களின் திருமணம் என இரு புகைப்படங்களையும் சித்து தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் வைரலாக இணையத்தில் பரவியது.

இதனைத் தொடர்ந்து சித்து விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் லீடு ரோலில நடித்து வருகிறார். இந்த சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேறி வருகிறது. அதே சமயம் ஸ்ரோயா ஜீ தமிழின் ரஜினி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனிடையே சமீபத்தில் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், இதனால் சித்து சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்தது. நடிப்பு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சித்து ஸ்ரேயா இருவரும் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடலுக்கு இவர்கள் நடனமாடி பதிவிட்ட வீடியே இணையத்தில் வைரலாக பரவியது. அந்த வகையில் தற்போது குத்துச்சண்டை போட்டியை போல் இவர்கள் வெளியிட்டுள்ள விடியோ பதிவு அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போது இருவரும் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கு குத்துச்சண்டை வீரர் ஜான் சீனா போல் தனது மனைவி ஸ்ரேயாவை தூக்கி தண்ணீரில் போடுகிறார் சித்து.

இந்த வீடியோ பதிவு சித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment