scorecardresearch

பிரபல சீரியலில் களம் இறங்கும் மெட்டி ஒலி நடிகை: மாஸ் அப்டேட்ஸ்

தலைநகரம், மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் சோனியா தனது கணவர் போஸ் வெங்கட்டுடன் இணைந்து நடித்திருப்பார்.

Sonia Bose
நடிகை சோனியா போஸ்

பிரபல நடிகை சோனியா போஸ் சன் டி.வியின் சபாஷ் மீனா என்ற சீரியலில் டைட்டில் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளவர் சோனியா. மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமான நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட்டின் மனைவியான இவர், தமிழில் பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

அதேபோல் தலைநகரம், மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் சோனியா தனது கணவர் போஸ் வெங்கட்டுடன் இணைந்து நடித்திருப்பார். கடைசியாக 2019-ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிக்குழு 2 படத்தில் நடித்திருந்த சோனியா போஸ், ஆசைகள், மீனையானாலும் மனைவி ஆகிய தொடர்களில் நடித்திருந்தார்.

இவரின் அம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம். தொடர்ந்து சன்டிவியின் மலர்கள், முகூர்த்தம், பாசம், செல்லமே, உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ள சோனியா வெங்கட் தற்போது பாண்டவர் இல்லம் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இதனிடையே சன்டிவியின் புதிதாக தொடங்க உள்ள சபாஷ் மீனா தொடரில் சோனியா டைட்டில் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோனியா 2 மகள்களுக்கு தாயாக நடிக்கும் இந்த சீரியலில் டிவி நடிகர் அபிஷேக் மற்றும் ஆனந்தராகம் சீரியலில் நாயகியாக நடித்த இந்து சௌத்ரி இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளனர். சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சோனியா மீண்டும் சன்டிவி சீரியலுக்கு திரும்பி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் சபாஷ் மீனா சீரியலுக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress sonia bose act titler role in new serial