ஒரு சில நடிகைகள் நடிக்க தொடங்கியவுடன், எனக்கு அவரை தெரியும், இவழைர தெரியும் என்று திமிராக நடந்துகொள்கிறார்கள். இவர்களை பார்த்தால் எரிச்சல் தான் வரும். ஆனால் சினிமாவையும் சின்னத்திரையும் சரியாக மேனேஜ் செய்யும் நடிகை வடிவுக்கரசி அப்படி இல்லை என்று நடிகர் ஸ்ரீகுமார் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், சின்னத்திரையில் முன்னணி நடிகராக பல சீரியல்களில் நடித்துள்ளவர் ஸ்ரீகுமார். இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகனான இவர், 2001-ம் ஆண்டு சூலம் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ஆனந்தம், சிவசக்தி, பைரவி, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
கடைசியாக சன் டிவியின் வானத்தைப்போல சீரியலில் நடித்திருந்தார். இந்த சீரியல் சமீபத்தில் முடிந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் படத்தில் ஸ்ரீகுமார் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இதனிடையே சமீபத்தில் யூடியூப் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ஸ்ரீகுமார், சின்னத்திரையில் சில நடிகைகள் குறித்து தனது கருத்தை தெரிவித்த நிலையில், அதற்கு நடிகை வடிவுக்காரசி கொடுத்த ரியாக்ஷன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நானும் சில நடிகைகளை பார்த்திருக்கிறேன் ஒரு சில சீரியலில் கதாநாயகி கேரக்டர் கிடைத்துவிட்டால் போதும்.. எனக்கு அவங்கள தெரியும், இவங்களை தெரியும் என்று ரொம்பவும் திமிராக நடந்து கொள்கிறார்கள். நான் எல்லோரையும் சொல்லவில்லை. ஒரு சிலரை மட்டும்தான் சொல்கிறேன். அவர்கள் கதாநாயகி ஆகிவிட்டால் மற்றவர்களை இளக்காரமாக நடத்துகிறார்கள். ஆனால் வடிவுகரசி அம்மா அப்படி கிடையாது.
நான் அவங்க கூட பல வருஷமா நடித்து இருக்கிறேன். அவங்க தன்னோடு நடிப்பவர்களை அரவணைத்து கொண்டு போறவங்க. நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசன், சிவாஜி கணேசன் உட்பட எல்லாரோடும் நடித்திருக்கிறார். பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார், இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் எவ்வளவு கஷ்டமான கேரக்டரையும் அசால்டாக நடித்துவிடுவார். அதுபோல சீரியலிலும் அவரை மிஞ்ச ஆள் கிடையாது என்று சொல்லுவேன். அப்படி நடித்திருந்தாலும் எந்த இடத்திலும் யாரிடமும் தன்னுடைய திமிரை காட்டவே மாட்டார்.
நான் சில காட்சிகளில் ஏதாவது நடித்து முடித்தவுடன் போனை பார்த்துக்கொண்டே இருப்பேன் யாருமே போன் செய்து பாராட்டமாட்டார்கள். ஆனால், வடிவுக்காரசி அம்மா என்னை பாராட்டியுள்ளார். என் அம்மா கூட என்னை பாராட்டியதில்லை. சில நேரங்களில் அவர் வீட்டிற்கு போய்விட்டால் கூட எனக்கு போன் செய்து அந்த காட்சியில் நீ அருமையாக நடித்தாய் என்று பாராட்டி இருக்கிறார். இதுபோல பெரிய மனசு பலருக்கு இருப்பதில்லை.
எனது அப்பா சங்கர் கணேஷ்க்கு பெரிய திருப்புமுணை ஏற்படுத்திய திரைப்படம் கன்னிப்பருவத்திலே. இந்த படத்தில் வடிவுக்காரசி அம்மாதான் ஹீரோயின். அதேபோல், அப்பா இசையமைத்த பல படங்களில் இவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அதனால் சிறுவயதில் இருந்து எனக்கும் வடிவுக்கரசி அம்மாவுக்கும் பந்தம் இருக்கிறது என்று நடிகர் ஸ்ரீகுமார் பேசியிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஸ்ரீகுமார் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வடிவுக்கரசி இதை எதிர்பார்க்காத ஒரு ரியாக்ஷன் கொடுத்தார். அதோடு ஸ்ரீ உண்மையிலேயே ரொம்பவும் அழகாக நடிப்பவர். அது மட்டும் அல்ல எப்போதும் யாருக்கும் பயப்பட மாட்டார். மனதில் சரி என்று பட்டால் சரிதான். ஆனால் யாருக்காவது ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக நின்று உதவி செய்வார் என்று வடிவுக்கரசி பாராட்டி இருக்கிறார். சிட்டி ஃபாக்ஸ் என்ற யூடியூப் சேனலில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.