Advertisment

3 வயது குழந்தைக்கும் ஹெல்மெட்: விஜய் டி.வி வில்லி நடிகை நிஜத்தில் எப்படி ரூல்ஸ் ஃபாலோ பண்றார் பாருங்க!

பல சீரியல்களில் நடித்து வந்த நடிகை ஸ்ரீதேவி அசோக், விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sridevi Ashok

சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்

சின்னத்திரையில் சீரியல் நடிகைகளுக்கு கிடைக்கும் வரவேற்பை போன்றே வில்லி நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பெரும்பாலும் சீரியல்கள் குடும்ப உறவுகளை மையப்படுத்தியே திரைக்கதை அமைப்பதால் ரசிகர்கள் சீரியலில் வரும் நாயகியை தங்களாகவும், வில்லி நடிகைகயை தங்களது வீட்டில் வில்லத்தனம் செய்யும் ஒருவராகவும் கற்பனை செய்துகொள்கின்றனர்.

Advertisment

இதனால் பெரும்பாலும் வில்லி நடிகைகளை பலரும் திட்டி தீர்த்தாலும், அவர்கள் இல்லை என்றால் சீரியலில் சுவராஸ்யம் இருக்காது என்றும் சொல்வார்கள். அந்த வகையில், தமிழ் சீரியல்களில் வில்லியாக நடித்து வரவேற்பை பெற்று வருபவர் ஸ்ரீதேவி அசோக். சன்டிவியின் செல்லமடி நீ எனக்கு என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கியவர் ஸ்ரீதேவி அசோக்.

அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த இவர், விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியலிலும் இவர் வில்லியாகவே நடித்திருந்தார். 30-க்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ள ஸ்ரீதேவி தற்போது விஜய் டிவியின் பொன்னி சீரியலில் நடித்து வருகிறார். இவரது நடிப்புக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

சொந்தமான பிஸினஸ் செய்து வரும் ஸ்ரீதேவி அவ்வப்போது தனது குடுமபத்துடன் வெளியில் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதுபோன்று வெளியில் செல்லும் போது புகைப்படங்களை தனது சமூகவலைதளங்களில் வெளியிட்டு வரும் ஸ்ரீதேவி அசோக், தற்போது  தனது குடும்பத்துடன் பைக் ரைடு சென்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பயணத்தில் ஸ்ரீதேவி தனது 3 வயது மகளுக்கும் ஹெல்மட் அணிவித்து அழைத்து செல்கிறார். இந்த புகைப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில், ஸ்ரீதேவி மிகவும் பொறுப்பானர் சமூக அக்கறை கொண்டவர் தனது 3 வயது மகளுக்கு கூட ஹெல்மட் அணிவித்து பாதுகாப்பாக அழைத்து செல்கிறார் என்று பதிவிட்டு வருகின்றனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sridevi Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment