Advertisment

'இவங்க மகள் அக்கா ஆகப் போறா': பிரக்னன்சியை கியூட்டாக அறிவித்த விஜய் டி.வி சீரியல் நடிகை

ராஜா ராணி சீரியலில் நடிக்கும்போது அசோக் என்பரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவிக்கு, சித்தாரா என்ற பெண் குழந்தை உள்ளது.

author-image
WebDesk
New Update
Sridevi Ashok

சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்

விஜய் டிவி சீரியலில் நடித்து வரும் நடிகை ஸ்ரீதேவி அசோக் தான் 2-வது முறையாக கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான முறையில் அறிவித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Advertisment

தனுஷ் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான புதுக்கோட்டையில் சரவணன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. இந்த படத்தில் தனுஷின் தங்கையாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் நடிப்பில் கிழக்கு கடற்கரை சாலை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களுமே அவருக்கு கை கொடுக்காத நிலையில்,  2007-ம் ஆண்டு சன்டிவியின் செல்லமடி நீ எனக்கு என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

தொடர்ந்து, கஸ்தூரி, தங்கம், இளவரசி, வாணி ராணி, செம்பருத்தி, ராஜா ராணி, அரண்மனைக்கிளி, காற்றுக்கென்ன வேலி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள ஸ்ரீதேவி அசோக் தெலுங்கிலும் சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியின் பொன்னி மற்றும் மோதலும் காதலும் என 2 சீரியல்களில் நடித்து வருகிறார். இதில் நடிகை பிரியா பவானி சங்கருடன் இணைந்து நடித்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் ஸ்ரீதேவிக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது.

ராஜா ராணி சீரியலில் நடிக்கும்போது அசோக் என்பரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவிக்கு, சித்தாரா என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்து ஓரிரு வருடங்கள் மீண்டும் சின்னத்திரைக்கு வந்த ஸ்ரீதேவி, சீரியல்களில் நடித்து வரும் நிலையில், தற்போது தான் 2-வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்காக போட்டோஷூட் நடத்தியுள்ள ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் குழந்தைகயுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் தனது குழந்தைக்கு நான் அக்காவாக போகிறேன் என் டிசர்ட்டை மாடிட்விட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணயைத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் நெட்டிசன்கள் என பலரும் ஸ்ரீதேவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment