scorecardresearch

நான் இனி பேசவில்லை… எங்க எழுதுங்க பாப்போம்… நடிகை ஸ்ரீநிதியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Tamil Serial Update : அனைவருக்கும் ஒருநாள் திருமணம் நடக்கும். ஆனால் நானும் சிம்புவும் மட்டும் எப்போதும் சிங்கிளாக இருப்போம்

நான் இனி பேசவில்லை… எங்க எழுதுங்க பாப்போம்… நடிகை ஸ்ரீநிதியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Tamil Serial Actress Srinidhi Instagram Viral : ஜீ தமிழின் யாரடி நீ மோகினி, மற்றும் புதுப்புது அர்த்தங்கள் தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி. சர்ச்சைகளுக்கு பெயர் போன இவர், வலிமை படத்திற்கு விமர்சனம் செய்து அஜித் ரசிகர்களிம் சிக்கிக்கொண்டார். அதனைத்தொடர்ந்து சமீபத்தில் சிம்பு தொடர்பான மீம்ஸ் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

அதில் அனைவருக்கும் ஒருநாள் திருமணம் நடக்கும். ஆனால் நானும் சிம்புவும் மட்டும் எப்போதும் சிங்கிளாக இருப்போம். என்று கூறியிருந்தார். இந்த பதிவு அப்போது வைரலாக பரவியதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ஏன் நீங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமே என்று கேட்டபோது நல்லாதான இருக்கும் ஆனா நான் அல்ரெடி கமிட் என்று கூறியிருந்தார்.

ஆனால் திடீரென கடந்த வாரம் சிம்பு தன்தை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும் தன்னை திருமணம் செய்துகொள்ள கோரி அவரின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாக பரவிய நிலையில், சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.

அதனை தொடர்ந்து தற்போது அவரது தோழி நக்ஷத்ரா குறித்து பேசி பரபரப்பை கிளப்பி வரும் ஸ்ரீநிதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தமிழ் பதிவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த பதிவில் அவர், நான் இனி பேசவில்லை… என் கதை பேசும் என்று எழுதியிருந்தார்.

ஆனால் இந்த பதிவில் எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டி ரசகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முதலில் தமிழை ஒழுங்காக கற்றுக்கொள்ளுங்கள் அதன்பிறகு உங்களின் கதை பேசுவதை பார்ப்போம் என்று கூறி வருகின்றனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress srinidhi writing tamil with spelling mistake