சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகபிரியாவின் கணவர் அரவிந்த கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், தனது கணவர் மரணம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று ஸ்ருதி வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
சன்டிவியின் நாதஸ்வரம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஸ்ருதி சண்முகப்பரியா. தொடர்ந்து ராதிகாவுடன் வாணி ராணி, கல்யாண பரிசு, விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியலிகளில் நடித்து பிரபலமான இவருக்கு சின்னத்திரையில் பல ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இவரது முதல் சீரியலான நாதஸ்வரம் இவருக்கு பலரின் பாராட்டுக்களை பெற்று தந்தது.
சின்னத்திரை மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ள ஸ்ருதி ஷண்முகப்பிரியா, கடந்தாண்டு அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் மிஸ்டர் தமிழ்நாடு 2022 போட்டியில் பங்கேற்று இரண்டாவது வென்றிருந்தார். திருமணத்திற்கு முன்பு சின்னத்திரையில் நடித்து வந்த ஸ்ருதி திருமணத்திற்கு பின் சீரியலில் இருந்து முழுவதுமாக விலகி குடமபத்தை பார்த்துக்கொள்ள தொடங்கினார்.
இதனிடையே ஸ்ருதிக்கு திருமணமாகி ஒரு வருடமே முடிந்துள்ள நிலையில், ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளாக வெளியான தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனிடையே தனது கணவர் உடல் மட்டும் தான் சென்றுள்ளது அவரது ஆன்மா என்னிடம் தான் என்னை பாதுகாத்துக்கொண்டிருக்கிறது என்று ஸ்ருதி நேற்று தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலாக பரவியது.
இதனிடையே தற்போது ஸ்ருதி வெளியிட்டுள்ள வீடியோ பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த வீடியோவில் அவர் எனது கணவர் அரவிந்த் மரணத்திற்கு ஆறுதல் கூறும் விதமாக பலர் நேரில் வந்தும், போன் மூலமாகவும், மெசேஜ் செய்தும் ஆறுதல் கூறியதற்கு நன்றி. அரவிந்த் என்னோடு தான் இருக்கிறார் எப்போதும் எங்களோடு தான் இருப்பார். வீட்டில் பல சமர்தாயங்கள் இருந்தாலும் இந்த வீடியோவை நான் ஏன் போட்டுள்ளேன் என்பதை முதலில் கூறி விடுகிறேன்.
உண்மையில் அரவிந்துக்கு என்ன நடந்தது என்பது பற்றி தெரியாதவர்கள் இதை ஒரு தகவலாக கூட எடுத்து கொள்ளலாம். ஆனால் உண்மை என்ன என்பதே தெரியாமல் சில யூடியூப் சேனல்கள், பல்வேறு வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அவருக்கு மாரடைப்பு வந்து இறந்து விட்டார். ஆனால் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் போது இறந்து விட்டார். அவரின் மரணத்திற்கு காரணம் இது அது என கூறுகிறார்கள் ஆனால் அப்படி வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை.
அவர் ஒரு சிவில் இன்ஜினியர், பேஷனுக்காக தான் பாடி பில்டராக இருந்தார். இப்படி வெளியாகும் தவறான தகவல்களால், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். தயவு செய்து உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட வேண்டும் என கூறியுள்ளார் . இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில், வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.