தற்போதைய காலகட்டத்தில் சினிமா நடிகைகளை விட சீரியல் நட்சத்திரங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதை பயன்படுத்திக்கொள்ளும் சீரியல் நட்சத்திரங்களும் அவ்வப்போது தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இதில் பெரும்பாலும சீரியல் நட்சத்திரங்கள் வெளியிடும் பதிவுகள் இணையத்தில் வைரலாவது அவ்வப்போது நடந்து வரும் நிகழ்வு. மேலும் இவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்பதால் இவர்கள் சிறியதாக எது செய்தாலும் அது பெரியளவில் வைரலாகிவிடும். அதே சமயம் அவர்கள் வெளியிடும் சில பதிவுகள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்களை ட்ரோல் செய்யவும் ரசிகர்கள் தயங்குவதில்லை.
அந்த வகையில் தற்போது சீரியல் வில்லி நடிகை சுப்புலட்சுமி தனது கணவருடன் எடுத்தக்கொண்டு ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கடுமையாக விமர்சனங்களை பெற்று வருகிறது. சன்.டிவியின் அழகிய தமிழ் மகள், அன்பே வா ஆகிய சீரியலிகளில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை சுப்புலட்சுமி ரங்கன்.
சமீபத்தில் இவர் தனது கணவருடன் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் நடத்தியுள்ளார். தற்போது இந்த புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள சுப்புலட்சுமி கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இதில் ஒரு புகைப்படத்தில் அவரது கணவர் சட்டை இல்லாமல் அமர்ந்திருக்கிறார். அவரின் சிக்ஸ்பேக் வயிற்றிவ் சுப்புலட்சுமி முத்தமிடுகிறார்.
மேலும இவர்கள் இருவரும் லிப் டு லிப் கொடுப்பது மாதிரியாக நெருக்கமான இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் மட்டுமல்லாது நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil