Advertisment

சன்டிவி சீரியலில் வில்லி நடிகை திடீர் விலகல்... ஏமாற்றத்தில் ரசிகர்கள்

Tamil Serial Update : டெல்னா டேவிஸ், விராட், கன்யா பாரதி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், தொடர் கொலை, போலீஸ் விசாரணை என்று பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது

author-image
WebDesk
Apr 05, 2022 10:23 IST
சன்டிவி சீரியலில் வில்லி நடிகை திடீர் விலகல்... ஏமாற்றத்தில் ரசிகர்கள்

Tamil Serial anbe Vaa Character Change Update : தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சீரியல் மட்டுமல்லாது அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு தனியாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதில் மக்களின் ரசனைக்கேற்ப சீரியல்கள் ஒளிபரப்புவதில், முக்கிய இடம்பெற்றுள்ள சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அன்பே வா.

Advertisment

காதலுடன் த்ரில்லர் கதையமைசத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டெல்னா டேவிஸ், விராட், கன்யா பாரதி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், தொடர் கொலை, போலீஸ் விசாரணை என்று பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இதில் வில்லி ஷில்பா வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சுப்புலட்சுமி ரங்கன்.

சின்னத்திரை சீரியல் வில்லியாக தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய அவர், தற்போது அன்பே வா சீரியலில் இருந்து விலகியுள்ளார். இவர் திடீரென விலகியதற்காக காரணம் இன்னும் அதிகராப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், சுப்புலட்சுமியின் விலகல் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதே நேரத்தில் தற்போது ஷில்பா கேரக்டரில், நடிக்க நடிகை நித்யா ராஜ் கமிட் ஆகியுள்ளார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் என்றென்றும் புன்னகை என்ற தொடரில் நடித்து வரும் நித்யா ராஜ், ஜீதமிழின் சூர்யவம்சம், மற்றும் கலர்ஸ் தமிழின் எங்கவீட்டு மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக பல சீரியல்களில் நடிகைகள் மாற்றம் அரங்கேறி வரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது சுப்புலட்சுமி ரங்கன் இணைந்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Serial Actress #Anbe Vaa Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment