Advertisment

'பாக்யா... என்ன இது? கோபி வர்ற நேரம் ஆச்சு!' மாடர்ன் டிரஸ்- டான்ஸூக்கு ரசிகர்கள் ரியாக்சன்

Serial Actress Suchithra : பாக்யலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா மாடர்ன் உடையில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
May 19, 2021 12:19 IST
'பாக்யா... என்ன இது? கோபி வர்ற நேரம் ஆச்சு!' மாடர்ன் டிரஸ்- டான்ஸூக்கு ரசிகர்கள் ரியாக்சன்

பாக்யலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா மாடர்ன் உடையில் நடனமாடும் வீடியோ இன்ன்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோ குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertisment

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்னணி சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. குடும்ப தலைவி ஒருவரின் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் கொடுக்கும் அதீத ஆதரவினால் இந்த சீரியலுக்கு டிஆர்பியில் டாப் 5ல் இடம் கிடைத்து வருகிறது. இந்த சீரியலில், நாயகியாக நடித்து வரும் சுசித்ரா தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.



தற்போது சீரியல் நடிகைகள் பலரும் சமூகலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர். இதில் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், சுசித்ரா சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நிலையில், அவ்வப்போது, தனது நடவடிக்கைகள் தொடர்பான புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

publive-image

அந்த வீடியோவில் மாடர்ன் உடையில் தோன்றும் சுசித்ரா, பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளர். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 'என்ன பாக்யா இதெல்லாம்' டான்ஸ் சுத்தமா உங்களுக்கு செட் ஆகல' "பாக்யா என்ன இது. எப்படி இருந்த ஆளு இப்படி ஆகிட்ட, இதுல பெஸ்ட் அம்மா அவார்டு வேற".. என நெட்டிசன்கள் பலரும் நெகடிவ் கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர்.

சீரியலில் ஹோம்லி உடையில் பார்த்து பழகிய ரசிகர்களுக்கு சுசித்ராவின் மார்டன் உடை நடனம் ரசிகர்களிடம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், இந்த வீடியோவுக்கு நெகடிவ் ரெஸ்பான்ஸ் தான் கிடைத்து வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Suchitra #Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment