/tamil-ie/media/media_files/uploads/2022/03/sujitha.png)
Tamil Serial Actress Sujitha Arabic Kuthu song : பீ்ஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா இந்த பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் தற்போது இறுதிக்கட்ட பணியில் உள்ள படம் பீஸ்ட். இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். மேலும் இயக்குநர் செல்வராகவன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 14-ந் தேதி இந்த படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து பாடல் வெளியிடப்பட்டது. வெளியான முதலெ இந்த பாடல் ரசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் திரைத்துறையை சேர்ந்த பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறன்றனர். ஏற்கனவே இந்த படத்தின் நாயகி பூஷா ஹெக்டே, நடிகை சமந்தா, சீரியல் நடிகர் சித்து ஸ்ரேயா உள்ளிட்ட பல இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான நடிகை சுஜிதா தனுஷ் தற்போ அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவுக்கு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதிலும் இதுவரை சேலையில் மட்டுமே பார்த்து பழகிய சுஜிதா இந்த வீடியோவில் மாடர்ன் உடையில் தோன்றி குத்தாட்டம் போட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் புதுமையாக உளளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.