scorecardresearch

ப்ரேமம் சாய் பல்லவியாக மாறிய சுஜிதா தனுஷ்… என்ன ஆட்டம் பாருங்க…

Tamil Serial Update : சுஜிதா, அவ்வப்போது சமூக வலைதளங்களில், வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Tamil Serial Actress Sujitha Dhanush : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் தெலுங்கு கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் சுஜிதா தனுஷ். ஆனால் இவருகென்று தனி அடையாளத்தை கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.

விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான இதில் தனம் என்றும் குடும்பத்தின் மூத்த மருமகளாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் சுஜிதா தனுஷ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் தெலுங்கு பதிப்பிலும் நடித்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவர் இவரது கேரக்டரில் வேறு யாரும் நடிக்க முடியாது என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளவர்.

நடிப்பு மட்டுமல்லாது விளம்பர படங்களை இயக்குவது உள்ளிட்ட சில பணிகளை மேற்கொண்டு வரும் சுஜிதா, அவ்வப்போது சமூக வலைதளங்களில், வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளியான ப்ரேமம் படம் இந்திய அளவில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் சாதுவாக வரும் நடிகை சாய் பல்லவி ஒரு கட்டத்தில் டான்ஸ் ஆடி அனைவரையும் வியக்க வைத்துவிடுவார். இந்த சீன் பலரின் ஃபேவரெட் சீனாக இருக்கும்.

தற்போது இந்த சீனை ஞாபகப்படுத்தும் விதமாக அதே மாதிரியான மியூசிக் ப்ளே ஆகும்போது டான்சர்கள் பலருடன் நடிகை சுஜிதா தனுஷ் டான்ஸ் ஆடியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சுஜிதாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress sujitha dhanush dance viral video