தென்னிந்திய சின்னத்திரையில் முன்னணி சீரியல் நடிகையாக இருப்பவர் சுஜிதா தனுஷ். பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில், நடித்துள்ளார். மேலும் அஜித்தின் ஹிட் படங்களில் ஒன்றான வாலி படத்தில், அவரின் தங்கையான நடித்திருந்தார்.
Advertisment
பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரம் மற்றும் நடிகையாக நடித்திருந்தாலும், சுஜிதா தனுஷை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ். 4 சகோதரர்களை மையமாக வைத்து குடும்ப கதையாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதில் குடும்பத்தின் மூத்த அண்ணி தனலட்சுமியாக சுஜிதா தனுஷ் தனது சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் சுஜிதா அவ்வப்போது தனது புகைப்படம் வீடியோ மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அதிலும் கதைகேளு கதைகேளு என்று தனியாக யூடியூப் சேனல் நடத்தி வரும் சுஜிதா அதில் சிறுவர்களை கவரும விதமாக பல கதைகளை சொல்லி வருகிறார். இதன் வழியாக அவர் பதிவிடும் அனைத்து பதிவுகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதுவரை குழந்தை நட்சத்திரம், சினிமா நடிகை, என பார்த்த சுஜிதா தனுஷ் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கிய 2 விளம்பர படங்கள் தொடர்பான மேக்கிங் வீடியோ தற்போது யூடியூப் தளத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு விளம்பரத்தில் நடிகை ஹன்சிகாவை இயக்கியுள்ளார். அரோமா பிராடக்ட், விளம்பட படம் தொடர்பாக மேக்கிங் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
இந்த வீடியோவில், இயக்குநராக தான் செய்த பணிகள் குறித்து சுஜிதா பகிர்ந்துள்ளார். விளம்பர பட இயக்குநரான அவரது கணவர் சுஜிதாவின் இயக்குநர் ஆசையை புரிந்துகொண்டு இந்த வாய்ப்பை கொடுத்ததாகவும், இயக்குநர் பணியில்ஏதாவது தவறு செய்தால் அவர் கூடவே இருந்து அந்த தவறை சரி செய்தாகவும் கூறியுள்ளார். மேலும் ஹன்சிகாவுடன் இந்த விளம்பர படத்தில் பயணம் செய்தது மறக்க முடியாதது என்று கூறியுள்ள சுஜிதா படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யமாக நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், இதை பார்க்கும் ரசிகர்கள் சுஜிதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகினறனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “