/tamil-ie/media/media_files/uploads/2022/04/Sujitha-Dhnaush.jpg)
Tamil Serial Actress Sujitha Give Award From Telangana Governor : தமிழ சின்னத்திரையில், முன்னணி நாயகியாக வலம் வருபவர் சுஜிதா தனுஷ். பிறந்து சில மாதங்களிலேயே பாக்யராஜின் முந்தானை முடிச்சி என்ற படத்தில் அறிமுகமான சுஜிதா தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற வாலி படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார். வெள்ளித்திரையில் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். 4 சகோரர்களின் பாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் தனம் என்ற மூத்த மருமகள் கேரக்டரில் சுஜிதா நடித்து வருகிறார்
நடிப்பு மட்டுமல்லாது விளம்பர படம் இயக்கம், அவுட்டிங் செல்வது என பிஸியாக இருந்து வரும் சுஜிதா சமீபத்தில் நடிகை ஹன்சிகாவை வைத்து 2 விளம்பரப்படங்களை இயக்கியிருந்தார். இது தொடர்பாக வீடியோ பதிவு அவரின் யூடியூப் தளத்தில் வெளியானது. மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்டீவாக இருக்கும் சுஜிதா அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி துணைநிலை ஆளுனர் மற்றும் தெலுங்கானாவின் ஆளுனர் தமிழிசை சௌந்திரராஜனிடம் விருது வாங்குவது போல் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த பதிவில்,
நமது கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைப்பது எப்போதுமே பெரிய விஷயம். அதுவும் உங்களை துறையில் சிறந்தவராகக் கௌரவிப்பது மட்டற்ற மகிழ்ச்சி. "மாண்புமிகு மகளிருக்காக" விருதுகளில் சிறந்த முன்மாதிரி நடிகையாக தெலுங்கானா ஆளுனர் மற்றும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜன்.அவர்களின் கைகளில் இருந்து எனக்கு விருது வழங்கப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் சுஜிதா தனுஷ்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.