சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில், முன்னணி நடிககையாக வலம் வருபவர் சுஜிதா தனுஷ். பிறந்து சில மாதங்களிலேயே திரைத்துறையில் அறிமுகமான இவர். பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

மேலும் தமிழ் தெலுங்கு, மலையளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முக்கிய கேரக்டரில் பல படங்களில் நடித்துள்ளார். பல மொழி படங்களில் இவர் நடித்திருந்தாலும், இவரை ரசிகர்கள் முன்னிலையில் கொண்டுசென்றது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

இதே சீரியலின் தெலுங்கு ரீமேக்கிலும் இவரே நடித்திருந்தார். நடிப்பு மட்டுமல்லாமல் விளம்பர படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வரும் சுஜிதா, சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.


இதில் சுஜிதா அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புன்னகை இல்லை, காதல் இல்லை வாழக்கை இல்லை எப்போது காதலோடு சேர்த்து புன்னகையுடன் இருங்கள் என்று பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதில் சுஜிதா சிரிக்காமல் போஸ் கொடுத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil