தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி சீரியல் நடிகையாக உயர்ந்துள்ளவர் சுஜிதா தனுஷ்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், 1983-ம் ஆண்டு வெளியான அப்பாஸ் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

தொடர்ந்து பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் உட்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்திருந்தாலும், அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலபடுத்தியது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பத்தின் மூத்த அண்ணி தனம் கேரக்டரில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அந்த கேரக்டருக்கு உயிர்கொண்டுத்து வருகிறார்.

இதே சீரியல் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் தனம் கேரக்டரில் சுஜிதாவே நடித்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி சீரியல்கள் பலற்றில் சுஜிதா நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஏஞ்சல் லுக்கில் சுஜிதா

குழந்தைகளுடன் சுஜிதா

நேச்சுரல் லுக் சுஜிதா

மாடலிங் போட்டோகிராஃபி சுஜிதா

மாடர்ன் உடையில் சுஜிதா
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil