ஆக்சன் ஹீரோயின் ஆயிடுவாங்ளோ..? பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி பஞ்ச் டயலாக்!

Serial Actress Sujitha Dhanush Tamil News : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா தனுஷ் பிரபல தெலுங்கு நடிகரின் டயலாக் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Serial Actress Sujitha Dhanush News : விஜய்டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவம் சகோதரபாசம் என குடும்ப உறவுகளை மையமாக வைத்து ஒளிபரபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மூத்த மருமகள் தனம் கேரக்டரில் நடித்து வருபவர் சுஜிதா தனுஷ். அந்த கேரக்டருக்கு தனது நடிப்பின் மூலம் உயிர் கொடுத்து வரும், சுஜிதா சிறு வயதில் இருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் பூவிழி வாசலிலே தாண்டவம், உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் டப்பிங் கலைஞராகவும் தன்னை நிரூபித்துள்ள சுஜிதா, மாஸ்டர் படத்தில் மலையாள வெர்ஷனுக்கு டப்பிங் பேசியுள்ளார். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீ{ரியலுக்கு தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில், தெலுங்கு வெர்ஷன் வதினமாவில் சீதா எனும் கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சுஜிதா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சுஜிதா வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் இடைவேளை நேரத்தில் கையில் ஒரு கத ஆயுதத்தை தூக்கிக் கொண்டு, பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் பாப்புலர் பஞ்ச் டயலாக்கான ‘டோண்ட் ட்ரபுள் தி ட்ரபுள்.. இஃப் யூ ட்ரபுள் தி ட்ரபுள்.. ட்ரபுள் ட்ரபுள்ஸ் யு.. ஐ அம் நாட் தி ட்ரபுள்.. ஐ அம் தி ட்ரூத்!’ என்கிற வசனத்தை, பேசுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதனிடையே மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் கொஞ்ச நாள் இல்லாமல் இருந்த ஜீவாவாக நடித்து வரும் வெங்கட் மற்றும் கதிராக நடித்து வரும் குமரனும் மீண்டும் இணைந்துள்ளனர். இது குறித்து பதிவிட்டுள்ள ஜீவா, 52 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஜீவாவாக என  கூறி சில படப்பிடிப்பு படங்களை பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial actress sujitha dhanush say telugu actor balakrishna famous dialogue

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com