/tamil-ie/media/media_files/uploads/2022/02/Sujitha-2.jpg)
Tamil Serial Actress Sujitha Dhanush : தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் சகோரத்துவம், கூட்டு குடும்பத்தின் நன்மை உள்ளிட்ட பல அவசியங்களை வலியுறுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது.
இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மூத்த மருமகள் தனம் கேரக்டரில் நடித்து வருபவர் சுஜிதா தனுஷ். குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில்அறிமுகமாகி, பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரம் மற்றும் முன்னணி கேரக்டரில் நடித்துள்ள இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்தான். இந்த சீரியலின் தெலுங்கு பதிப்பிலும் இவர் தனம் ரோலில் நடித்து வருகிறார்.
சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் ஆக்டீவாக இருக்கும் சுஜிதா தனுஷ் அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் கதைகேளு கதைகேளு என்ற யூடியூப் சேனல் மூலம் குழந்தைகளுக்கு தேவையாக பல கதைகளை சொல்லி வரும் இவர் சமீபத்தில் நடிகை ஹன்சிகாவை வைத்து இவர் விளம்பர படம் ஒன்றை இயக்கியது தொடர்பான வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.
மேலும் சமீபத்தில், பாரதியார் இல்லத்தை பார்வையிட்டது, காதலர் தினத்தன்று தனது கணவருடன் கடற்கரையில் டூயட் பாடியது என பிஸியாக இருந்து வரும் சுஜிதா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது குழந்தைகளுடன் நடனமாடும் சுஜிதா, மை ரவுடிஸ் வி ஆர் த்ரி என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.