ட்ரெஸ் ஒண்ணுதான்... ஆனா கோணங்கள் பல... ரீல்ஸ் வீடியோவில் கலக்கும் சுஜிதா தனுஷ்

Tamil Serial Update ;அஜித்தின் வாலி படத்தில் அவரது தங்கையாக நடித்திருந்தாலும், அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்தான்

Tamil Serial Update ;அஜித்தின் வாலி படத்தில் அவரது தங்கையாக நடித்திருந்தாலும், அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்தான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ட்ரெஸ் ஒண்ணுதான்... ஆனா கோணங்கள் பல... ரீல்ஸ் வீடியோவில் கலக்கும் சுஜிதா தனுஷ்

Tamil Serial Actress Sujitha Dhanush Reels Viral : சினிமா நட்சத்திரங்களை விட சீரியல் நட்சத்திரங்களே தற்போது அதிகமாக சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர். அதற்கு ஏற்றார்போல் சமூகவலைதளங்களில் அவர்களை ஃபாலோ பண்ணும் ரசிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இதற்கு மக்கிய காரணம் தொலைக்காட்சி சீரியலும் ரியாலிட்டி ஷோக்களும் தான்.

Advertisment

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் இல்லங்களில் நேரடியாக ரசிகர்களை சென்றடைவதால் அவர்கள் பெரிய பாப்புலாராக உள்ளனர். அதேபோல் அவர்கள் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிடும் பதிவுகள் எளிதில் வைரலாக பரவி விடும். அந்த வகையில் சின்னத்திரையின் முன்னணி சீரியல் நடிகையாக சுஜிதா தனுஷ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான சுஜிதா தனுஷ் குழந்தை பருவத்திலேயே திரைப்படங்களில் அறிமுகமாகி அஜித்தின் வாலி படத்தில் அவரது தங்கையாக நடித்திருந்தாலும், அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்தான். நடிப்பு மட்டுமல்லாமல் விளம்பர படம் இயக்குவது உள்ளிட்ட பல பணிகளில் ஈடுபட்டு வரும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது தொட்டால் பூ மலரும் என்று தொடங்கும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அவர் ஒரு உடையில் நடனமாடியுள்ள இந்த வீடிரயோவில் அவர் உடை பல பரிமானங்களில் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

Advertisment
Advertisements

சுஜிதா எவ்வித அணிகலன்கள் மற்றும் மேக்கப் இல்லாமல் சிம்பிளாக உள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் பியூட்டிஃபுல் என்று சுஜிதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Actress Sujitha Pandian Stores Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: