Advertisment

குழந்தையாக மாறிய பிரபல சீரியல் நடிகை... வைரலாகும் இன்ஸ்டா வீடியோ

Tamil Serial Update : பல மொழி படங்களில் இவர் நடித்திருந்தாலும், இவரை ரசிகர்கள் முன்னிலையில் கொண்டுசென்றது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

author-image
WebDesk
New Update
குழந்தையாக மாறிய பிரபல சீரியல் நடிகை... வைரலாகும் இன்ஸ்டா வீடியோ

Tamil Serial Actress Sujitha Dhanush Viral Video : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில்,  முன்னணி நடிககையாக வலம் வருபவர் சுஜிதா தனுஷ். பிறந்து சில மாதங்களிலேயே திரைத்துறையில் அறிமுகமான இவர். பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் தமிழ் தெலுங்கு, மலையளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முக்கிய கேரக்டரில் பல படங்களில் நடித்துள்ளார்.

Advertisment

பல மொழி படங்களில் இவர் நடித்திருந்தாலும், இவரை ரசிகர்கள் முன்னிலையில் கொண்டுசென்றது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மூத்த மருமகள் தனம் கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதே சீரியலின் தெலுங்கு ரீமேக்கிலும் இவரே நடித்திருந்தார்.

நடிப்பு மட்டுமல்லாமல் விளம்பர படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வரும் சுஜிதா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஹன்சிகாவை வைத்து 2 விளம்பர படங்களை இயக்கியிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாக பரவியது. மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சுஜிதா அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில் போட்டிங் செல்லும்போது அணிந்துகொள்ளும் பாதுகாப்பு உடையுடன் நீர் நிலையின் நடுவில் துப்பாட்டாவை பறக்கவில்ட்டு செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதேபோல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுஜிதா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில். சைக்கிளில் ரைடு போவதுபோல் ஜாலியாக சுற்றி வருகிறார். இதுவரை பெரும்பாலும் பாரம்பரிய உடையில் பார்த்து பழங்கிய சுஜிதா தற்போது பேண்ட் டீசர்ட் அணிந்து புன்னகையுடன் சுற்றி வருகிறார் . இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update Actress Sujitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment