விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ள நடிகை சுஜிதா தனுஷ் தற்போது தாவணி பாவாடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய மொழிகளில் சுமார் 100-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் சுஜிதா தனுஷ், அஜித் நடிப்பில் பிளாக்பஸ்டர் திரைப்படமான வாலி படத்தில், முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். படங்களில் நடித்திருந்தாலும், விஜய்டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலே இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
தமிழில் குடும்பங்கள் கொண்டாடும் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ், இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சகோதர பாசம், குடும்ப ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், குடும்பத்தின் மூத்த அண்ணியாக நடித்து வருபவர் சுஜிதா தனுஷ். கூட்டு குடும்பத்தை எப்படி நடத்த வேண்டும் என்று இவரிடம் கற்றுக்கொள்ளலாம் என்று சொல்லும் அளவுக்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இதே சீரியல் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில், அதிரும் தனம் கேரக்டரில் சுஜிதாவே நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல், தெலுங்கில், வாணி, வாடியம்மா, எடடுகுலு உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவை தற்போது வெளியிட்டுள்ளார். சீரியலில், சேலையிலேயே பார்த்து பழகிய சுஜிதா தனுஷ் இந்த வீடியோ பதிவில் தாவணி பாவடை கட்டி வருகிறார். இந்த வீடியோ பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் சுஜிதா தனுஷ’ புதிதாக சீரியலில் கமிட் ஆகியுள்ளாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் இந்த வீடியோ பதிவும் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இந்த வீடியோ பதிவு தெலுங்கில் ஒரு சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.
இந்த வீடியோவை அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ரீல் வீடியோ என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும் லைக்ஸை வாரி வழங்கி வரும் நிலையில், பலர் இந்த வீடியோ பதிவை ஷேர் செய்து வருகினறனர். ரசிகர்கள் பலரும் சுஜிதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகினறனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “