Advertisment

பாரதியார் வீட்டுக்கு திடீர் விசிட் : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் வைரல் வீடியோ

Tamil Serial Update : பிறந்து சில மாதங்களிலேயே பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமான சுஜிதா தனுஷ் ஏராளமாக படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
பாரதியார் வீட்டுக்கு திடீர் விசிட் : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் வைரல் வீடியோ

Tamil Serial Actress Sujitha Dhanush Visit Bharathiyar House : சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சுஜிதா தனுஷ் சமீபத்தில் பாரதியாரின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் சுஜிதா தனுஷ்.பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மூத்த மருமகள் தனம் கேரக்டரில் நடித்து வரும் இவர், பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார். குடும்பத்தில் ஏற்படும் சண்டை மற்றும் சச்சரவுகளை திறம்பட எதிர்கொண்டு குடும்பத்தை பிரியாமல் ஒற்றுமையுடன் பாதுகாத்து வருகிறார்.

பிறந்து சில மாதங்களிலேயே பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமான சுஜிதா தனுஷ் ஏராளமாக படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் அஜித்தின் வாலி படத்தில் அவரின் தங்கையாக நடித்துள்ள இவர், பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். பல படங்களில் நடித்திருந்தாலும் அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.

இந்த சீரியலின் பெரிய வரவேற்பை தொடர்ந்து ஒரு சில மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழில் நடித்து வரும் அதே தனம் கேரக்ரில் தெலுங்கிலும் சுஜிதாவே நடித்து வருகிறார். சீரியல் மட்டுமல்லாது சமூ வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சுஜிதா அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோபதிவுகளை வெளியிட்டு வருகிறார். மேலும் கதைகேளு கதைகேளு என்ற யூடியூப் சேனல் மூலம் குழந்தைகளுக்கு தேவையான பல கதைகயை சொல்லி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிகை ஹன்சிகாவை வைத்து 2 விளம்பரப்படங்களை இயக்கியது தொடர்பான மேக்கிங் வீடியோக்களை வெளியிட்டது வைரலாக பரவியது. இந்த வகையில் தற்போது இவர் சுதந்திர போராட்ட வீரரான பாரதியாரின் இல்லத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாரதியாரின் மனதில் உறுதி வேண்டும் என்ற பாடலுடன் தொடங்கும் இந்த வீடியோவில், சுஜிதா தனது குழந்தைகளுடன் வீட்டை சுற்றி பார்வையிடுகிறார். அங்கிருக்கும் ஒரு பெண் பாரதியார் வாழ்க்கை குறித்து எடுத்து சொல்கிறார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actress Sujitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment