Tamil Serial Actress Sujitha Dhanush Valentines Day Special : விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு தமிழ் ரசிகர்களிடையே அறிமுகம் தேவையில்லை. இன்றைய நிலையில், கூட்டுக்குடும்பம் எப்ப இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த சீரியலை சொல்லலாம். பாண்டியன ஸ்டோர்ஸ் என்ற ஒரு மளிகை கடை வைத்து கூட்டுக்குடும்பத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது.
ஸ்டாலின், சுஜிதா, ஹேமாராஜ்குமார், வெங்கட், குமரன், காவிய அறிவுமணி சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த சீரியல் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மூத்த மருமகள் தனம் கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் சுஜிதா தனுஷ். கூட்டு குடும்பத்தை எப்படி கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இவரிடம் கற்றுக்கொள்ளலாம்.
தமிழ் மட்டுமல்லாது பாண்டியன் ஸ்டோர்ஸ் தெலுங்கு ரீமேக்கிலும் தனம் கேரக்டரில் இவரே நடித்து வருகிறார். பிறந்த சில மாதங்களிலேயே திரைத்துறையில் அறிமுகமான சுஜிதா தனுஷ், பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், அஜித்தின் வாலி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளார். ஆனால் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்தான்
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சுஜிதா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர், நடிகை ஹன்சிகாவை வைத்து விளம்பர படம் ஒன்றை இயக்கிய மேக்கிங் வீடியோவை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சமூகலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில, அவ்வப்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள்மற்றும் வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது இவர் தனது கணவருடன் சேர்ந்து வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது. பிப்ரவரி14- இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை தனது கணவருடன் கொண்டாட கடற்கரைக்கு சென்றுள்ள சுஜிதா, ரேவதி நாசர் நடிப்பில் வெளியான அவதாரம் படத்தில் இடம்பெற்ற தென்றல் வந்து தீண்டும்போது என்ற பாடலுக்கு கணவருடன் இணைந்து வாய்ஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த விடியோ பதிவு வைரலாக பரவி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “