சன்டிவியின் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
சமூக வலைதளமான டிக்டாக் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர்களில் முக்கியமானவர் கேப்ரியல்லா.
Advertisment
Advertisement
ரஜினியின் கபாலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து நயன்தாராவின் ஐரா, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
அதன்பிறகு சுந்தரி சீரியலில் நடித்து பிரபலமான இவர், தற்போது சினிமாவில் நடிகையாக மாறியுள்ளார். மேலும் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
அவ்வப்போது இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஏ.ஆர்.ரஹமான் ஃபாலோயராக உள்ளார்.
இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கேப்ரியல்லா அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. சேலை மற்றும் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள இந்த படங்கள் கவனம் ஈர்த்துள்ளது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“