கிரிக்கெட் ‘கோச்’சை மணந்த சன் டிவி நடிகை: கல்யாணத்தை ‘லைவ்’ ஆக ஒளிபரப்பி சாதனை(?)

நாயகி சீரியல் நடிகை சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில், தனது திருமணத்தை யூடியூப்பில் லைவாக ஒளிபரப்பியுள்ளாா.

பிரபல சீரியல் நடிகை சுஷ்மா நாயர் தனது திருமணத்தை யூடியூப்பில் லைவ்வாக ஒளிபரப்பு செய்துள்ளாா.

சன் தொலைக்காட்சியில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பான நாயகி சீரியலில் நடித்து புகழ்பெற்றவர் சுஷ்மா நாயர். அந்த சீரியலில் அனன்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற இவர், கடந்த ஆண்டு தொடக்கத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக சீரியல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து சில மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த சீரியல் தொடங்கப்பட்டபோது அனன்யா கதாப்பாத்திரம் எடுக்கப்பட்டது.

தொடர்ந்து சுமங்கலி தொடரில் நடித்துவந்த அவர் தற்போது திருமண வாழ்கையில் இணைந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐ.சி.சி) அகாடமி சான்றிதழ் பெற்ற கிரிக்கெட் பயிற்சியாளராக இருக்கும் லிஜோ டி ஜான் என்பவரை கடந்த ஏப்ரல் 18-ந் தேதி மணந்துகொண்டார். கோவிட் -19 நெறிமுறைகளைப் பின்பற்றி ஒரு தேவாலயத்தில், நடந்த இந்த திருமண விழாவில், இரு குடும்பங்களின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த திருமணத்தை சுஷ்மா தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ஒளிபரப்பினார். மேலும் இந்த திருமணம் தொடர்பான புகைப்படத்தை சுஷ்மா நாயர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது பெரும் வைரலாகி வருகிறது. சுஷ்மா நாயர் கடைசியாக ‘திருமகள்’  சீரியலில் ப்ரகதி என்ற கதாப்பத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial actress sushma nair get married telecast live in youtube

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com