New Update
/indian-express-tamil/media/media_files/jLPW0zKZVzzgNjU0EWol.jpg)
ஈரமான ரோஜாவே சீரியலின் 2-வது சீசனில் நாயகியாக நடித்திருந்த நடிகை சுவாதி தற்போது சன் டிவியின் புதிய சீரியலில் கமிட் ஆகியுள்ளார்.
சின்னத்திரையில் சன்டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை தக்கவைத்துக்கொள்ள அவ்வப்போது பழைய சீரியல்களை முடிவுக்கு கொண்டு வருவதும் புதிய சீரியல்களை களமிறங்குவதை வழக்கமாக வைத்துள்ள சன்டிவி தற்போது மற்றொரு புதிய சீரியலை களமிறக்க உள்ளது. இந்த சீரியலில் விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த நடிகை சுவாதி நாயகியாக நடிக்க உள்ளார்.
தமிழ் சின்னத்திரையை பொறுத்தவரை சன்டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதன் காரணமாக விஜய் டிவி சீரியல் நடிகைகள் பலரும் தற்போது சன்டிவி சீரியல்களில் நாயகிகளாக நடித்து வருகின்றனர். இதில் குறி்ப்பித்தக்க நடிகைகள், ஆலியா மனசா, தர்ஷனா, கேப்ரியல்லா உள்ளிட்ட நடிகைகள் தற்போது சன்டிவி சீரியல்களில் நாயகிகளாக நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகை சுவாதி இணைந்துள்ளார்.
சன்டிவியில் புதிதாக தொடங்க உள்ள மூன்று முடிச்சு என்ற சீரியல் மூலம் சுவாதி அறிமுகமாக உள்ளார். இந்த சீரியலின் ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், சீரியல் ஒளிபரப்பாகும் தேதி குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. அதேபோல் தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் நாயகியின் குடும்பம் பற்றிய தகவல்கள் தான் உள்ளது. நாயகன் பற்றி எந்த தகவலும் இல்லை. இது குறித்து அடுத்த பரமோவில் தெரியவரும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று முடிச்சு சீரியல் ஒளிபரப்பு காரணமாக சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல அல்லது சுந்தரி 2 ஆகிய சீரியல்களில் ஒன்று முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. கன்னட திரையுலகில் 4 படங்களில் நாயகியாக நடித்திருந்த நடிகை சுவாதி, ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில், கார்த்தி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் மெய்யழகன் படத்தில் சுவாதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இதனிடையே தற்போது மீண்டும் சின்னத்திரையில் நாயகியாக என்ட்ரி ஆகியுள்ள சுவாதி அடுத்து வெள்ளித்திரையில் எந்த படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.