ஜீ தமிழின நினைத்தாலே இனிக்கும் சீரியல் நடிகை சுவாதி நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச வேண்டும் என்பதற்காகவே தமிழ் கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல் ஒளிபரப்புவதில் ஜீ தமிழ் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், மற்ற சேனல்களை போல் ஜீ தமிழிலும், சீரியல்களுக்கு விருது வழக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஜீ தமிழ் விருது நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தற்போதைய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வில்லன் நாயகன் என அனைத்து கேரக்டர்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளது.
இதில் சின்னத்திரையில் உள்ள நடிகர் நடிகைகள் கூட விஜய் சேதுபதியின் ரசிகராக உள்ளனர். அந்த வகையில் ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் நாயகி சுவாதி சர்மா விஜய் சேதுபதியின் தீவிர ரசிகை என்று கூறியுள்ளார். ஜீ தமிழ் விருது நிகழ்ச்சியின் நினைத்தாலே இனிக்கும் சீரியலுக்கு விருது அறிவிக்கப்பட்டு விஜய் சேதுபதி அந்த விருதை வழங்கினார்.
அப்போது விருது வாங்குவதற்காக வந்த நடிகை சுவாதி சர்மா பேசுகையில், எனக்கு கையும் ஓடல காலும் ஓட உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆசை இதற்காக கடந்த ஒன்றை வருடங்களாக முயற்சி பண்ணிட்டு இருக்கேன. உங்களை பார்த்தால் தமிழில் பேச வேண்டும் என்பதற்காகவே தமிழ் கற்றுக்கொண்டேன். தப்பாக இருந்தால் மன்னித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு தொகுப்பாளர் எல்லாருக்கும் சுவீட் கொடுப்பீங்களே இவருக்கு சுவீட் இல்லையா என்று கேட்க, நீங்க பேசிய தமிழே அப்படித்தான் இருந்தது என்று விஜய் சேதுபதி சொல்கிறார். பிறகு மேடையிலேயே விஜய் சேதுபதிக்கு நடிகை சுவாதி சர்மா சுவீட் கொடுக்கிறார். அவரே ஊட்டியும் விடுகிறார். அதன்பிறகு சீரியலின் நாயகன் ஆனந்த் செல்வன் விஜய் சேதுபதியிடம் கிஸ் கேட்க அவரும் கிஸ் கொடுக்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil