சன்டிவியின் சந்திரலேகா சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஸ்வேதா சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த நிலையில், முதல் முறையாக தனது குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்{ அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஸ்வேதா பண்டேகர், தொடர்ந்து வல்லுவன் வாசுகி, பூவா தலையா, நான் தான் பாலா உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர் கடைசியாக ஜெயம் ரவியின் பூலோகம் படத்தில் நடித்திருந்தார். அதேபோல் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துள்ள ஸ்வேதா பண்டேகர், சன்டிவியின் சந்திரலேகா சீரியல் மூலம் பிரபலமானார்.
இதனிடையே சன்மியூசிக் சேனலில் விஜேவாக இருந்த மால் மருகன் என்பவரை திருமணம் செய்துகொண்ட கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இவருக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்தது. சமீபத்தில் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவிழா நடத்தியுள்ளனர். இதில் ஆண் குழந்தைக்கு கிரிதன் கிருஷ்ணா என்றும் பெண் குழந்தைக்கு, சர்வஸ்ரீ என்றும் பெயரிட்டுள்ளனர்.
இந்நிலையில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடிகை ஸ்வேதா பண்டேகர் தனது கணவர் மால் மருகாவுடன் இணைந்து தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதில் குழந்தைகளின் பெயர்களுடன் ஹேப்பி சில்ரன்ஸ் டே என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஸ்வேதாவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“