அஜித்தின் ஆழ்வார் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த நடிகை ஸ்வேதா பண்டேகர், தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற கட்டா குஸ்தி படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான படம் ஆழ்வார். அஜித், அசின், கீர்த்தி சாவ்லா விவேக், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் அஜித்தின் தங்கையாக திரையுலகில் அறிமுகமானவர் ஸ்வேதா பண்டேகர்.

தொடர்ந்து வள்ளுவன் வாசுகி, பூவா தலையா, இதயம் திரையரங்கம், பூலோகம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர், மகள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அடுத்து கடந்த ஆண்டு முடிவுக்கு வந்த சன்டிவியின் சந்திரலேகா தொடரில் இரட்டை வேடங்களில் நடித்த ஸ்வேதா, சன்டிவியின் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார்.
சிந்தாள் சோப் மற்றும் உதயகிருஷ்ணா நெய் விளம்பரங்களில் நடித்துள்ள ஸ்வேதா சன் மியூசிக் தொகுப்பாளர் மால் மருகா என்பரை திருமணம் செய்துகொண்டார். தற்போது கர்ப்பமாக இருக்கும் அவர் தனது கர்ப்ப கால புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“