சன்டிவியின் ஆனந்த்ராகம் சீரியலில் நாயகி அபி கேரக்டரில் நடித்து வந்த நடிகை, தற்போது இந்த சீரியலில் இருந்து விலகியதாக அறிவித்துள்ள நிலையில், விலகியதற்கான காரணம் குறித்தும் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில், சன்டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேபோல், மற்ற சேனல்களில் ஹிட் சீரியலில் நடித்த பல நட்சத்திரங்கள் சன்டிவி சீரியலில் கமிட் ஆகி நடித்து வருவது தொடர்ந்து வருகிறது. அதேபோல் சன்டிவியில் இருந்தும், சில நடிகைகள், மற்ற சீரியல்களில் கமிட் ஆகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சன்டிவியின் ஹிட் சீரியலில் இருந்து நடிகை விலகியுள்ளார்.
சன்டிவியில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கிய சீரியல் ஆனந்த ராகம், தொடக்கத்தில் டி.ஆர்.பி ரேட்டிங்கில், முன்னணியில் இருந்து வந்த இந்த சீரியல், டைமிங் மாற்றம் காரணமாக வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதையின் காரணமாக ஓரளவு வரவேற்பை பெற்று வருகிறது. அக்கா தங்கை வாழ்க்கையை மையமாக வைத்த இந்த சீரியலில், அக்கா ஈஸ்வரி தங்கை அபிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். தங்கை கேரக்டரில் நடிகை ஸ்வேதா நடித்து வருகிறார்.
வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து வந்த ஸ்வேதா தற்போது இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனது இன்ஸ்டா குடும்பத்திற்கு சொல்ல வருவது என்ன என்றால், நான் இனி ஆனந்த்ராகம் சீரியலின் ஒரு பகுதியாக இருக்க மாட்டேன். 750 எபிசோட்டுடன் என்னுடைய சாப்டர் முடிகிறது. அபி கேரக்டர் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல், இந்த கேரக்டரை ரொம்பவே எஞ்சாய் பண்ணி பண்ணேன்.
இந்த நேரத்தில் நான் எல்லோருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். அளவில்லாமல், அபிக்கு அன்பு கொடுத்தீங்க, என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம் இனி வரப்போகிறது அதற்காக நான் எந்த சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்று தனது பதிவில் வெளியிட்டுள்ளார். இதனிடையே யூடியூப்பில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா 2 சீரியலில், ஸ்வேதா தொடர்பான காட்சிகள் அடுத்து ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“