விஜய் டிவியின் மகாநதி சீரியலில் நடித்து வந்த நடிகை திவ்யா கணேஷ் விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் நடித்து வரும் நடிகை கமிட் ஆகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் திவ்யா கணேஷ். ராமநாதபுரத்தை சேர்ந்த இவர், இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்திருந்தாலும், பாக்கியலட்சுமி சீரியல் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்று ரசிகர்கள் பட்டாளத்தை அதிகமாக உருவாக்கியது. இவரது நடிப்பும் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
பாக்கியலட்சுமி மட்டுமல்லாமல், விஜய் டிவியின் மகாநதி சீரியலிலும் திவ்யா கணேஷ் கங்கா என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார். 4 சகோதரிகளின் பாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலை பிரவீன் பென்னட் இயக்கி வரும் நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கங்கா என்ற கேரக்டரில் நடிகை பிரதீபா என்பவர் நடித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் அவர் விலகியதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக திவ்யா கணேஷ் அந்த கேரக்டரில் நடிக்க வந்தர். இந்த சீரியலில் குமரன் – கங்கா இடையிலான காட்சிகளின் சமீபத்திய எபிசோடுகள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், மகாநதி சீரியல் ஷூட்டிங்கில் பங்கேற்க முடியவில்லை. அதனால் வேறு நடிகைகயை தேடிக்கொள்ளுங்கள் என்று தனது சமூகவலைதளத்தில் திவ்யா கணேஷ் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து மகாநதி சீரியலில் கங்கா கேரக்டரில் நடிக்க, திவ்யா கணேஷ்க்கு பதிலாக சன்டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் நடித்து வரும் நடிகை தாரணி கங்கா கேரக்டரில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அவரது முதல் காட்சியே அவரது தங்கையை போட்டு அடிப்பது போன்ற காட்சியாக அமைந்துள்ளது. கங்காவின் எதார்த்தமான கேரக்டரை நடிகை தாரணி பிரதிபலிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“