scorecardresearch

காதலரா, கணவரா? தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை சர்ச்சை

உமா மகேஷ்வரி தற்போது ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரின் நாயகியின் தோழியாக நடித்து வந்தார்.

Uma Mahesh
நடிகை உமா மகேஷ்வரி

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நாயகியின் தோழியாக நடித்து வரும் நடிகை உமா மகேஷ்வரியின் லண்டன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையின் முக்கிய சீரியல்களில் ஒன்று தமிழும் சரஸ்வதியும். தீபக் தினகர் நாயகனாக நடித்து வரும் இந்த சீரியலில், நட்சத்திரா நாகேஷ் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் நட்சத்திரா நாகேஷின் தோழியாக நடித்து வருபவர் நடிகை உமா மகேஷ்வரி. தற்போது லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ள இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மாடலிங் துறையில் கால்பதித்த உமா மகேஷ்வரி, வித்தியாசமாக வெளியிட்ட போடடோஷூட்கள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அந்த வகையில் சன்டிவியின் நாயகி தொடரில் நடித்தார்.

2 சீசன்கள் கொண்ட இந்த சீரியலில் கொரோனாவுக்கு முன்பு வெளியான முதல் சீசனில் வித்யா பிரதீப் நாயகியாகவும், கொரோனாவுக்கு அடுத்த 2-வது சீசனில் நட்சத்திரா நாகேஷ் நாயகியாகவும் நடித்தனர்.

இந்த சீரியலில் நடித்த உமா மகேஷ்வரி அடுத்து கலர் தமிழில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே தொடரில் நடித்தார். இந்த சீரியலும் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரின் நாயகியின் தோழியாக நடித்து வந்தார். இந்த தொடரில் மின்னல் என்ற கேரக்டரில் நடித்த உமா மகேஷ்வரி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

ஆனால் தற்போது இவரது காட்சிகள் சீரியலில் இடம்பெறாத நிலையில், அவர் தொடரில் இருந்து வெளியேறிவிட்டாரா என்று ரசிகர்கள் கேட்க தொடங்கிவிட்டனர்.

தற்போது லண்டன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள உமா மகேஷ்வரி, 6 வருடமாக ஒன்றாக இருக்கிறோம். 7 வது வருடத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

இதனால் உமா மகேஷ்வரியுடன் இருப்பது அவரது கணவரா அல்லது காதலரா? அவர் லண்டனிலேயே செட்டில் ஆகிவிட்டாரா அல்லது இந்தியா திரும்புவாரா? இனிமேல் நடிக்க வரமாட்டாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress uma mageswari london photos viral on social

Best of Express