தயவு செய்து இப்படி பண்ணாதீங்க; உங்களுக்கே அது திரும்பி வரும்: சீரியல் நடிகை வைஷ்ணவி கண்ணீர் வீடியோ!

வைஷ்ணவியை உருவகேலி செய்யும் நெட்டிசன்கள், இவர் வெற்றிக்கு பொருத்தமான ஜோடி இல்லை என்று கூறி வருகின்றனர். இது தம்பதிக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

வைஷ்ணவியை உருவகேலி செய்யும் நெட்டிசன்கள், இவர் வெற்றிக்கு பொருத்தமான ஜோடி இல்லை என்று கூறி வருகின்றனர். இது தம்பதிக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Vetri Vasanth

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் வெற்றி வசந்த், பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவி இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், சமூகவலைதளங்களில் பரப்பப்படும் அவதூறு கருத்துக்களால், தங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை வைஷ்ணவி வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது,

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்னி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் தான் நடிகை வைஷ்ணவி. அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு சீரியலான சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, மக்களின் மனதில் இடம் பிடித்தவர் வெற்றி வசந்த். இவர்கள் இருவருமே காதலித்து திருமணம் செய்துகொண் நிலையில்’ இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

அதேபோல் திருமணத்திற்கு பின்னர் தனது கணவருடன், மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வைஷ்ணவி அவ்வப்போது இணயைத்தில் பதிவிட்டு வருகிறார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு அதிகம் இருந்து வரும் நிலையில், ஒருசிலர் நெகடீவ் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக வைஷ்ணவியை உருவகேலி செய்யும் நெட்டிசன்கள், இவர் வெற்றிக்கு பொருத்தமான ஜோடி இல்லை என்று கூறி வருகின்றனர். இது தம்பதிக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வைஷ்ணவி சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், நாங்கள் பிரபலங்கள் என்பதால், எங்கள் மீது ரசிகர்கள் அபிமானம் கொள்ளலாம். ஆனால், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு, தங்கள் கருத்துக்களை சொல்வது சொல்வது எந்த வகையில் நியாயம்? நான் நடிகையாக இந்தத் துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். திருமணம் முடிந்து சில நாட்களுக்கு ஓய்வு எடுத்தால், 'நீ உன் புருஷன் காசுல உட்கார்ந்து சாப்பிடுகிறாயா என்று கேட்கிறார்கள். நான் என் கணவர் காசில் சாப்பிட, அதற்கு எனக்கு முழு உரிமை இருக்கிறது. அதை விமர்சிக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment
Advertisements

மேலும் இந்த வீடியோவில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், எதிர்மறை எண்ணங்களை பரப்பி, மற்றவர்களை இழிவுபடுத்த முயற்சிக்கும் அனைவருக்கும் ஒரு செய்தி. உங்கள் நேரத்தை வீணடிப்பதை நிறுத்துங்கள். உங்கள் வெறுப்பு மற்றவர்களை ஒருபோதும் பாதிக்காது, அது உங்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். எதிர்மறையான கருத்துக்களைப் பதிவிடுவதும், ஒருவரின் பெயரை அவதூறு செய்வதும் உங்களை சக்தி வாய்ந்தவராக காட்டாது. மாறாக, அது உங்களுடைய பொறாமையையும் பாதுகாப்பற்ற தன்மையையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

நீங்கள் மற்றவர்களைக் கீழே தள்ளினால், நீங்கள் உயர்ந்து விடுவீர்கள் என்று நினைத்தால், ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள். மரியாதை என்பது செயல்களால் சம்பாதிக்கப்படுவது. திரைக்குப் பின்னால் வெறுப்பைப் பரப்புவதால் அல்ல. பேசுவதற்கு உங்களுக்கு தைரியம் இருந்தால், மரியாதையுடன் நேரடியாகப் பேசுங்கள். இல்லையெனில், உங்கள் எல்லைக்குள் இருங்கள். வெறுப்பு இலவசம்தான், ஆனால் உங்களை புறக்கணிப்பதும் இலவசம்தான். மேலும், உங்கள் நாடகத்தை விட நான் அமைதியைத் தான் தேர்வு செய்வேன். உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால், உங்கள் எதிர்மறை எண்ணங்கள் ஏற்கனவே வெற்றி பெற்று வரும் ஒருவரை ஒருபோதும் தடுக்காது என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள், மற்றும் சீரியல் ரசிகர்கள் பலரும் வைஷ்ணவிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

tamil serial Actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: