நடிப்பு ஆர்வத்தில் ஐடி வேலையை துறந்த வானத்தைப்போல துளசி லைஃப் ஸ்டைல்

Tamil Serial Update : இந்த சீரியல் பழைய கான்சப்ட் இதெலலாம் யார் பார்ப்பார்கள் என்று பயத்த ஸ்வேதா இந்த சீரியலின் திரைக்கதை தன்னை கவர்ந்தது

Tamil Serial Actress Swetha Lifestyle update : தமிழில் சீரியல்களின் ஒளிப்பரப்புவதில் சன்டிவிக்கு முக்கிய இடம் உண்டு. காலை முதல் நள்ளிரவு வரை பல சீரியல்களை ஒளிபரப்பி வரும் சன்எவிக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகம். இதன் காரணமாக மாதத்திற்கு ஒரு புதிய சீரியலை களமிறக்கி வருகிறது. அனைத்து சீரியல்களும் குடும்ப உறவுளை மையபபடுத்தி, துரோகம், பழிவாங்குதல் காதல் உள்ளிட்ட அம்சங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் வானத்தைப்போல.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியலில் அண்ணன் சின்ராசுவாக நடிகர் தமன்குமார், மற்றும் தங்கை துளசியாக நடிகை ஸ்வேதா நடித்து வருகினறனர். சன்டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். இதன் காரணமாக வானத்தைப்போல சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. இதில் தங்கை துளசியாக நடித்து வரும் நடிகை ஸ்வேதா தனது சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்த ஸ்வேதா தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பெங்களூருவில் முடித்துள்ளார். ஐடி துறையில் பணியாற்றி வந்த இவர், நடிப்பின் மீதுளள ஆர்வத்தினால், மாடலிங் துறையில் ஈடுபட்டுள்ளார். இதன்மூலம் பிரபலமடைந்த அவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைத்து்ளளது. முதன் முதலாக கலர்ஸ கன்னடா தொலைக்காட்சியில் வெளியான சீரியலில் நடித்த அவர் தொடர்ந்து 2019-ம் தெலுங்கில் ஜெமினி டிவியில் மதுமாசம் என்ற சீரியலில் நடித்துள்ளார்.

இதன் மூலம் தெலுங்கில் பிரபலமாக நடிகையாக வளர்ந்த ஸ்வெதாவுக்கு, தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்த ஸ்வேதா, ஏராளமாக குறும்படம், ஆல்பம் பாடல்களகில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அதன்பிறகு கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் அவருக்கு வானத்தைப்போல சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள ஸ்வேதா அவரின் உண்மையான பெயர் மறந்து மற்றவர்கள் அவரை துளசி எனறு கூப்பிடும் அளைவுக்கு உயர்ந்துள்ளார். முதலில் இந்த சீரியல் பழைய கான்சப்ட் இதெலலாம் யார் பார்ப்பார்கள் என்று பயத்த ஸ்வேதா இந்த சீரியலின் திரைக்கதை தன்னை கவர்ந்ததாக கூறியுள்ளார். துளசி கேரக்டருக்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்த நல்ல வாயப்பு இருந்தது இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று கூறியுள்ளார்.

குடும்பத்தில் மூத்த பெண்ணான ஸ்வேதாவுக்கு ஒரு தங்கையும் ஒரு தம்பியும் உள்ளனர். எனது குடும்பத்தில் எல்லோரும் கேஷூவால் என்னை சீரியலில் பார்க்கும்போது என்னடா இது ரியல் லைஃப்ல நீ இப்படியேல்லாம் இல்லையே என்று சொல்லுவார்கள். வெளியிடங்களுக்கு நாள் சென்றால் கூட அங்கே என்னை பார்க்கும் மக்கள் நீங்கள் துளசி தானே உங்க சீரியல் நல்லா இருக்கு என்று சொல்லி போட்டோ எடுத்தக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் வானத்தைப்போல சீரியல் மூலம் புகழ்பெற்றுள்ள ஸ்வேதா சில தவிர்க்க முடியாத காரணங்களால் தற்போது அந்த சீரியலில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial actress vanathaipola thulasi swetha lifestyle update in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express