சின்னத்திரை நயன்தாரா நீங்கதானா? வைரலாகும் சீரியல் நடிகையின் பழைய ட்விட்

Tamil Serial Update : தமிழ் சினிமாவில் தற்போது பல படங்களை கையில் வைத்துள்ள நடிகை வாணி போஜன், சின்னத்திரை நயன்தாரா என்று கூறிப்பிட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

Actress Vaani Bhojan Chinnathirai Nayanthara : சின்னத்திரையில் சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இன்னும் சொல்ல வேண்டுமானால், பெரியத்திரை நடிகைகளுக்கும் டஃப் கொடுக்கும் அளவுக்கு சின்னத்திரை நடிகைகள் தங்களது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் சின்னத்திரை சீரியல்கள் நாள் தோறும் ஒளிபரப்பாகி வருவதால், அதில் நடித்து வரும் நடிகைகள் இல்லத்தரசிகள் மத்தியில் நன்கு பிரபலமாகி வருகின்றனர். இந்த வரவேற்பை வைத்தே சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரையிலும் வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பிபரலமாவர் வாணி போஜன். சின்னத்திரையில் தெய்வமகள் சீரியலில் அறிமுகமான இவர், அந்த சீரியல்ல சத்யா என்ற கதாப்பாத்திரத்தில் தைரியமான பெண்ணாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். இந்த சீரியல் தற்போது நிறைவு பெற்றுவிட்டாலும், இதில் நடித்த வாணி போஜன் ரசிகர்கள் மத்தியில் இன்னும் சத்யாவாகவே இருக்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றுள்ளார்.

இந்த சீரியல் மூலமாக பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ள இவரை, ரசிகர்கள் பலரும் சின்னத்திரை நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர்.  இதனை ஏற்றுக்கொள்ளும் விதமாக வாணி போஜன் கடந்த ஆண்டு தன்னைத் தானே லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டு ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பேட்டி ஒன்றில் பங்கேற்ற வணிபோஜனிடன் சின்ன திரை நயன்தாரா என்று அழைப்பது குறித்து கேட்கப்பட்டது.

இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள வாணி போஜன், ‘என்னோட நடித்தவர்கள் ஆகட்டும். உங்களுக்கே தெரியும் நான் தான் அவங்களுக்கு இன்ஸபிரேஷன் என்று சொல்றாங்க. அதை நினைக்கும் போது எனக்கு சந்தோஷமாக தான் இருக்கு என்று கூறியுள்ளர். ஆனாலும் அவரது பதிவுக்கு கேலி கிண்டல்கள் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது வெள்ளித்திரையில் தடம் பதித்துள்ள வாணி போஜன், பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, மகான் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial actress vani bhojan chinnathirai nayanthara update

Next Story
ஒருவழியாக அந்த 3 சம்பவங்களைப் பகிர்ந்தார் ராஜு – நிலைமாறிய பிக் பாஸ் வீடு!Bigg Boss Tamil 5 Day 49 Review Kamal Hassan Isaivani Eviction
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express