சின்னத்திரையில் தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை வாணி போஜன், தற்போது தனது பழைய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறார்.
1988-ம் ஆண்டு ஊட்டியில் பிறந்த வாணி போஜன், கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ஓர் இரவு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு அதிகாரம் 79 என்ற படத்தில் நடித்திருந்தார். இரு படங்களுமே பெரிதாக வாணி போஜனுக்கு கை கொடுக்காத நிலையில், அடுத்து 2013-ம் ஆண்டு, சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியலில் நடித்திருந்தார்.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், வாணி போஜனுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது. 5 வருடங்கள் ஒளிபரப்பான இந்த சீரியல் 2018-ம் முடிவுக்கு வந்த நிலையில், அடுத்து ஜீ தமிழின் லட்சுமி வந்தாச்சு என்ற சீரியலில் நடித்திருந்தார். இந்த சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வாணி போஜன், சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்டவர். அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்த வாணி போஜன், ஓ மை கடவுளே படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார், தற்போது பிஸியான நடிகையாக வலம் வரும் வாணி போஜன், சமீபத்தில் வெளியான அஞ்சாமை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து, தற்போது சசிகுமாருடன் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, ஆர்யன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் வாணி போஷன் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் இவர், அதனை நிரூபிக்கும் வகையில் ஸ்டைலிஷாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“