Advertisment
Presenting Partner
Desktop GIF

13 வருடங்கள் முடிந்தது: இதை விட வேறு எதுவும் வேண்டாம்; திருமண நாளில் சீரியல் நடிகை வைரல் பதிவு!

சீரியல் நடிகை வித்யா பிரதீப் திருமண புகைப்படங்களை வெளியிட்டு தனது 13-வது திருமண நாளை கொண்டாடி வருகிறார்

author-image
WebDesk
New Update
Vidya Pradeep

கணவருடன் வித்யா பிரதீப்

தனக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிவிட்டதாக கூறி தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை வித்யா பிரதீப்க்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்று பலரும் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர். 

Advertisment

கடந்த 2010-ம் ஆண்டு தமிழில் வெளியான அவள் பெயர் தமிழரசி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் வித்யா பிரதீப். கேரளாவை சேர்ந்த இவர் அடுத்து விருந்தாளி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த 2 படங்களுமே அவருக்கு கை கொடுக்கவில்லை. அதன்பிறகு தமிழில் சைவம், அதிபர், அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த வித்யா பிரதீப், சித்திரை செவ்வானம், எண்ணி துணிக, டி3, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரையில் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய நாயகி சீரியலின் லீடு ரோலில் நடித்திருந்த வித்யா பிரதீப், ஐ ஹேட், ஐ லவ் யூ என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

சின்னத்திரையில் இவர் நடித்த நாயகி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. முதலில் இவர் கேரக்டரில் நடிகை விஜயலட்சுமி நடித்து வந்த நிலையில், அவர் விலகியதை தொடர்ந்து வித்யா பிரதீப் அந்த கேரக்டரில் நடித்திருந்தார். இந்த ஆனந்தி கேரக்டர் இவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்த நிலையில், அடுத்து தடம் என்ற படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து அசத்தியிருந்தார். 

மருத்துவம் படித்துவிட்டு சினிமாவில் நடிகையாக மாறியுள்ள வித்யா பிரதீப், சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் நிலையில், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது திருமண புகைப்படங்கள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், உணர்ச்சிமிக்க பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ''13 வருடங்கள், இந்த நேரத்தில் என் வாழ்க்கையில் நீங்கள் கொண்டு வந்த அழகையும் அர்த்தத்தையும் படம்பிடிக்க வார்த்தைகள் போதாது. ஒன்றாக, எண்ணற்ற நினைவுகளை என்றென்றும் போற்றும் வகையில் உருவாக்கியுள்ளோம். நீங்கள் எப்பொழுதும் எனக்காக இருந்திருக்கிறீர்கள், என்னை உங்கள் முன்னுரிமையாக்கி, என்னை மிகவும் முழுமையாக உணரச் செய்தீர்கள். உங்கள் நிபந்தனையற்ற அன்பு என்னை அளவுகடந்த பணக்காரனாக உணர வைக்கிறது.

நீங்கள் எப்போதும் என் முகத்தில் ஒரு புன்னகையைக் கொண்டு வருகிறீர்கள், என் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கிறீர்கள். என் கண்ணீரைத் துடைக்க உன் தோள் எப்போதும் இருக்கும், நான் பேசுவதற்கு முன்பே, எனக்கு என்ன தேவை என்று உனக்குத் தெரியும். நீங்கள் என்னை ஒரு விலையுயர்ந்த குழந்தையைப் போல கவனித்துக்கொள்கிறீர்கள். கடவுளே, இந்த 13 அழகான வருடங்களுக்கும், வரப்போகும் இன்னும் பல வருடங்களுக்கும் நன்றி. உன்னுடன் என் வாழ்க்கை அழகாக இருக்கிறது, இதைவிட வேறு எதையும் என்னால் கேட்க முடியாது’’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் வித்யா பிரதீப்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், என்னது உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா, அதுவும் 13 வருடம் ஆச்சா என்று ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
tamil serial Actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment