கணவரின் கொடுமை… வாய்ப்பு தராத உறவினர்கள்… சீரியல் நடிகை விலாசினியின் வெற்றிக்கதை

Tamil Serial Update : சீரியலில் கணவரின் கொடுமைக்கு ஆளாகும் சித்ரா என்ற கேரக்டரில் நடித்து வரும் விலாசினி, இந்த கேரக்டர் தனது நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

Serial Actress Vilasini Lifestyle : ஆர்ஜே, விஜே, டப்பிங் கலைஞர் மற்றும் சீரியல் நடிகை என பன்முக திறமை கொண்டவர் விலாசினி. விஜய் டிவியின் பிரபலமான ஹிட் சீரியல் பாவம் கணேசன் சீரியலில் கணேசனின் மூத்த அக்க சித்ரா கேரக்டரில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்று வருபவர். கணவரின் பேச்சுக்கு அடங்கி பயந்த சுவாபம் கொண்டராக நடித்து வரும் இவர், தனது தாய் வீட்டிற்கு பேச வேண்டும் என்றால் கூட கணவரின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

தற்போது பிரபலமான சீரியல் நடிகையாக உள்ள இவர், பாவம் கணேசன் சீரியலில் உள்ளது போலவே தனது நிஜ வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்ததாக கூறியுள்ளார். முன்னணி இசையமைப்பாளரான இளையராஜாவின் நெருங்கிய உறவினரான இவர். பாடகியாக வேண்டும் என்ற ஆசையில் பாடுவதற்கான வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். இதற்கான முயற்சியாக தனது அண்ணன்களாக கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா, பிரேம்ஜி ஆகியோரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார்.

இதன் பலனாக பிரியாணி படத்தில் ஒரு பாடலில் சில வரிகளை பாடியுள்ளார். அதன்பிறகு பெரிதாக பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், ரோடியோவில் ஆர்ஜேவாக வேலைபார்த்துள்ளார். அதன்பிறகு ஆதித்யா டிவியில் விஜேவாக மாறிய தொகுப்பாளினியாகவும் பணியாற்றியுள்ளார் அதன்பிறகு நடிப்பதற்காக வாய்ப்பு தேடிய அவர் பல டங்களில் தனது நிறத்தின் காரணமாக புறக்கணிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு ஒரு நண்பரின் மூலம் பாவம் கணேசன் சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சீரியல நாயகன் நவீன் விலாசினிக்கு ரெம்ப நன்றாக தெரிந்தவர்

இந்த சீரியலில் கணவரின் கொடுமைக்கு ஆளாகும் சித்ரா என்ற கேரக்டரில் நடித்து வரும் விலாசினி, இந்த கேரக்டர் தனது நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாக கூறியுள்ளார். இந்த சீரியலில் வரும் கணவரை விட எனது நிஜ வாழ்வில் கணவர் மிகவும் மோசனமானவர் அவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார். இதை தெரிந்துகொண்டு தற்போது அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது மீடியாவில் பஸியாக இருந்து வரும் இவர், ஆர்ஜே, விஜே. டப்பிங் ஆர்டிஸ்ட், சீரியல் நடிகை பாடகி என பல துறைகளில் முத்திரை பதித்து வருகிறார். மேலும் மருது படத்தில் ஸ்ரீதிவ்யா உட்பட பல படங்களில் நாயகிகளுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ள இவர், நயன்தாரா மற்றும் காஜல அகர்வாலுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial actress vilasani lifestyle update in tamil paavam ganesan serial

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express