டிக்டாக் பிரபலம்... சீரியல் நடிகையின் நெருங்கிய தோழி... வினுஷா தேவி கண்ணம்மா ஆன கதை...

Tamil Serial Update : நடிகை கேப்ரியலாவின் (சுந்தரி சீரியல் நடிகை)நெருங்கி தோழியான இவர், அவருடன் இணைந்து பல  நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

Tamil Serial Update : நடிகை கேப்ரியலாவின் (சுந்தரி சீரியல் நடிகை)நெருங்கி தோழியான இவர், அவருடன் இணைந்து பல  நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

author-image
WebDesk
New Update
டிக்டாக் பிரபலம்... சீரியல் நடிகையின் நெருங்கிய தோழி... வினுஷா தேவி கண்ணம்மா ஆன கதை...

Serial Actress Vinusha Devi Lifestory Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேறி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. கர்ப்பிணியாக விட்டைவிட்டு வெளியேறிய அபலை பெண் ஒருவர் தனது வாழ்வில் முன்னேற்த்திற்காக முயற்சியே இந்த சீயலின் கதைக்கரு. இந்த சீரியலில்ல கண்ம்மா என்ற லீடு ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரோஷ்னி ஹரி்பிரியன். இந்த சீரியலில் தனது நடிப்புக்காக பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ள இவர், ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ளார்.

Advertisment

மேலும் பாரதி கண்ணம்மா சீரியலின் அடையாளமாக திகழ்ந்த இவர், திடீரென சீரியலை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். ரோஷ்னியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த சில நாட்களுக்கு முன், இவர் சீரியலின் படப்பிடிப்பு தளத்தில், இறுதி நாளை கொண்டாடும் புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாக பரவியது.

அவர் ஏன் திடீரென சீரியலை விட்டு வெளியேறினார் என்பது அனைவருக்கும் புரியாத புதிராக உள்ள நிலையில், திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்புகள் வந்துகொண்டிருப்பதால், அவர் சீரியலில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து அடுத்த கண்ணம்மா யார் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், கண்ணம்மா ரோலில் நடிக்கும் புதிய நடிகை ரோஷ்னியின் இடத்தை பூர்த்தி செய்வாரா என்ற கேள்வியும் எழுந்தது.

இ்நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடிக்க வினுஷா தேவி ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வினுஷா தேவி நடிப்பில் ப்ரமோ வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த ப்ரமோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் ரோஷ்னி விட்டுச்சென்ற இடத்திற்கு அச்சு அசலாக அவரை மாதிரியே ஒரு நடிகையை தேர்வு செய்துள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Advertisment
Advertisements

சென்னையை சேர்த்த வினுஷா தேவி, தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலேயே முடித்துள்ளார். மேலும் நடிகை கேப்ரியலாவின் (சுந்தரி சீரியல் நடிகை)நெருங்கி தோழியான இவர், அவருடன் இணைந்து பல  நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

டிக்டாக் வீடியோ மூலம் புகழ்பெற்ற இவர், திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் கதாப்பாத்திரத்தில் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ஃபாலோயர்களைக் வைத்துள்ள இவர், தனக்கு கண்ணம்மா பாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்ததற்கு, பாரதி கண்ணம்மா தொடரின் இயக்குனரான பிரவீன் பென்னட்டிற்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் படப்பிடிப்பில் நடக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

கண்ணம்மா என்ற மிகவும் சக்திவாய்ந்த பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு வரம் கிடைத்தது போல” என்று தெரிவித்தார் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் வினுஷா ரோஷ்னியை போலவே இருக்கிறார் என்று கூறியுள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News Bharathi Kannamma Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: