Serial Actress Vinusha Devi Photo Gallery : விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சந்தேக போராட்டத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தொடக்கத்தில் சரியாக ரெஸ்பான்ஸ் இல்லாத இந்த சீரியல் கண்ணம்மாவின் நடை பயணத்திற்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
Advertisment
இந்நிலையில் ஒரு கட்டத்தில், இதில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷ்னி ஹரிப்பிரியன் விலகியதை தொடர்ந்து கண்ணம்மாவாக நடிக்க வாய்ப்பு பெற்றவர் வினுஷா தேவி. டிக்டாக் மூலம் பிரபலமான இவர், பல படங்களின் வசனம் மற்றும் நடிப்பை வீடியோவாக வெளியிட்டு பாராட்டுக்களை பெற்று வந்தார். குறிப்பாக திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டி பேசும் வசனத்தை இவர் பேசியது பலரின் பாராட்டுக்களை பெற்றது.
Advertisment
Advertisements
சீரியல் மட்டுமல்லாது சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் வினுஷா தேவி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இது பெயிண்டிங்கா அல்லது புகைப்படமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், தங்களது கருத்தக்களை பகிர்ந்து வரும் நிலையில், இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil