சமூக வலைதளங்களின் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி சீரியல் நடிகையாக மாறியுள்ளார் வினுஷா தேவி. சினிமா மற்றும் சின்னத்திரையில் சாதிக்க நிறம் ஒரு தடையில்லை என்று அழுத்தமாக பதிவு செய்த முக்கிய நடிகைகளில் முக்கியமானவர்

டிக்டாக் மூலம் பிரபலமானவர்தான் வினுஷா தேவி. அதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் பாரதி கணணம்மா சீரியலில் முதன்மை கேரக்டரில் நடித்து வந்த நாயகி ரோஷ்னி ஹரிப்பிரியன் திடீரென சீரியலை விட்டு விலகினார்.
இதன்பிறகு கண்ணம்மா ரோலில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், அந்த வாய்ப்பை வினுஷா தேவி கமிட் ஆகி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.
தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், இன்று முதல் பாரதி கண்ணம்மா சீரியலின் சீசன் 2 ஒளிபரப்பாக உள்ளது. இதில்கண்ணம்மாவாக வினுஷா தேவியே நடித்து வருகிறார்.
நடிப்பு மட்டுமல்லாமல் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் வினுஷா தேவி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/