தன்னை பற்றி பாடி ஷேமிங் செய்யும் விதமாக பேசி விட்டு தன்னிடமே மன்னிப்பு கேட்டதாக நிக்சன் சொல்வது பொய் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகை விணுஷா தேவி வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவருக்கு பலரும் ஆளுதல் கூறி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாயா, பூர்ணிமா, ஐஷூ உள்ளிட்டோர் ஒருபுறமும், விசித்ரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் ஒரு பக்கமும் இருந்துகொண்டு தொடர் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பேசிய வார்த்தைகள் திரையில் தெரியும், அதை யார் பேசியது என்பதும் எதற்காக பேசினார் என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நேற்று டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் விணுஷா தேவி குறித்து சர்ச்சையாக பேசியிருந்த நிக்சன், அவர் வேலைக்காரி மாதிரி இருக்கிறார். அவர் மண்டை சிறியதாக இருக்கிறது. அங்கங்க இருக்க வேண்டியது எதுவும் இல்லை. கண்கள் மட்டும் அழகா இருக்கு என்று கூறிய ஸ்டேட்மெண்ட் வந்தது. இதை பார்த்த ஹவுஸ்மெட்ஸ் அனைவரும் நிக்சனை ஒரு மாதிரியாக பார்த்திருந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த நிக்சன், நீங்கள் நினைக்கிற மாதிரி நான் அதை மீன் பண்ணி சொல்லவில்லை. இது விணுஷாவுக்கும் தெரியும் நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன் என்று கூறியிருந்தார்.
இது தொடர்பான ப்ரமோ வெளியானதில் இருந்து உரிமைகுரல் எழுப்பி பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய கமல்ஹாசன் இதை கவனத்தில் எடுத்துக்கொள்வாரா என்றும், நிக்சனுக்கு பிரதீப் எவ்வளவோ பரவாயில்லை. அவர் பெண்களிடம் இப்படி நடந்துகொண்டதே இல்லை என்று கூறி வருகின்றனர். ஆனாலும் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் விசித்ரா மற்றும் அர்ச்சனாவை தவிர இது பற்றி எதுவும் தெரியாமல் கேஷ்யூவலாக விட்டுவிட்டனர்.
இதனிடையே நிக்சன் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை விணுஷா,
நான் இப்போது பிக் பாஸ் உள்ளே இல்லை என்றாலும், நான் இதைப் பற்றி பேசவும், எனக்காக நிற்கவும் விரும்புகிறேன். பிக்பாஸ் வீட்டில் முதல் வாரத்தில், நிக்சனுக்கும் எனக்கும் நல்ல உறவு இருந்தது, நான் அவரை ஒரு உண்மையாகவே சகோதரனாக கருதினேன். நான் அவருடன் அப்படித்தான் நடந்து கொண்டேன், ஆரம்பத்தில், அவர் எப்போது என்னை ட்ரோல் செய்யத் தொடங்கினார் என்பதை நான் பொருட்படுத்தவில்லை, அது நன்றாக வேடிக்கையாக இருந்தது.
இருப்பினும், நாட்கள் செல்லச் செல்ல, அவர் எல்லைகளைக் கடந்து பேசத் தொடங்கினார். மேலும் அவரது நடவடிக்கைகள் என்னைக் காயப்படுத்தியதால் அவரை நிறுத்தும்படி நான் அவரிடம் கேட்க வேண்டியிருந்தது. இந்த நடத்தைக்காக ஒரு நாள், அவர் மன்னிப்பு கேட்டார், ஆனால் அது ட்ரோலிங்கிற்காக மட்டுமே இருந்தது, அவர் செய்த பாடி ஷேமிங் கருத்துக்காக அல்ல.
நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது நிக்சன் மன்னிப்பு கேட்கவில்லை அல்லது உடலைப் பற்றி பேசவில்லை. நிக்சன் என்னிடம் சொன்னதாகவும் இவை அனைத்தும் எனக்குத் தெரியும் என்றும் பொய்யான குறிப்பைக் கொடுக்கிறார். "இல்லை எனக்கு தெரியாது". பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகுதான் நான் அதை பற்றி அறிந்தேன்.
இப்போது நிக்சன் மன்னிப்பு கேட்டாலும் அது நிக்சனை நல்ல நபராக மாற்றாது. புள்ளி கும்பலுடன் சேர்ந்து அவர் "என்னை ஆட்சேபிப்பது நிச்சயமாக எனக்கு வேடிக்கையாகவோ நகைச்சுவையாகவோ இல்லை". கடந்த வாரத்தில் "உரிமை குறள்" எழுப்பிய அந்த பெண்ணியவாதிகள் எங்கே? எனக்காக பேசிய விசித்ராவுக்கு நன்றி. நான் வீட்டில் இருக்கும் போது நிக்சனை மிகவும் மதிக்கிறேன், அவர் எனக்கு ஏற்படுத்திய வலியை மீறி அவரை ஒரு சகோதரனைப் போல கருதினேன்.
இருப்பினும், அவர் என்னைப் பற்றி கூறிய வீடியோ மற்றும் கருத்தைப் பார்த்த பிறகு, நான் அவர் மீதான மரியாதையை இழந்துவிட்டேன். வார இறுதி எபிசோடில் கமல் சார் இது தொடர்பாக விவாதிப்பார் என்று நம்புகிறேன். இந்த பிரச்சினையில் நிக்சனுக்கு எதிராக நிற்கும் மக்களுக்கும், எனக்காக நிற்கும் மக்களுக்கும் நான் உண்மையிலேயே நன்றி கூறுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். விணுஷாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விணுஷாவின் பதிவுக்கு தனது கருத்தை கூறியுள்ள கனா காணும் காலங்கள் தொடர் நடிகை தீபிகா, 'நீங்கள் இப்போது கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். இப்போது நடக்கும் எல்லாம் பிரச்சனைகளையும் உங்களுக்கு தெரிய வைத்திருக்கிறார். நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு மாதம் முழுவதும் இவர்களோடு சகித்த உங்கள் பலத்தை கண்டு நான் வியக்கிறேன்' என்று கூறியுள்ளார். அதேபோல் இப்படித்தான் நேரில் ஒன்றும் முதுகுக்கு பின்னாடி ஒன்றும் பேசிக்கொண்டிருப்பார்கள். நீங்கள் இதை பற்றி கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“