New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/10/Vidhya-Pradeep2.jpg)
Tamil Actress Vidhya Pradeep Viral Photos : சின்னத்திரையில் இருந்து தற்போது ஏராளமான நடிகர் நடிகைகள் வெள்ளித்திரையில் சாதித்து வருவது நாம் அனைவரும அறிந்த ஒன்று. அந்த வகையில் சைவம், பசங்க 2, அதிபர் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும், சன்டிவியின் நாயகி சீரியல் மூலம் பிரபலமானவர் வித்யா பிரதீப். அந்த சீரியல மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர், தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அருண்விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இவர், தொடர்ந்து பொன்மகள் வந்தால், கசட தபற தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது அசுரகுலம் ஒத்தைக்கு ஒத்தை என பல படங்களை கைவசம் வைத்துள்ள வித்யா பிரதீப்
மருத்துவத்துறையில் ஒரு நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ளார். நடிப்பில் இருந்த ஆர்வம் காரணமாக தொடக்கத்தில் செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கைகளில் விளம்பர மாடலாக நடித்து இருந்து வந்துள்ளார்.
அதன்பிறகு 2010-ம் ஆண்டு அவள் பெயர் தமிழரசி படத்தில் டான்சராகவும், விருந்தாளி படத்தில் சிறிய கதாப்பாத்திரத்திரும் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் வித்யா பிரதீப், அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் மாடர்ன் உடையில் தலையில் வெள்ளை முடியுடன் இருக்கும் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் தற்போது பிக் பாஸ் சீசன் 5வில் பங்கேற்றுள்ள ஐக்கி பெர்ரியோடு ஒப்பிட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.