New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/10/VJ-Akshaya.jpg)
சன்.டி.வியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமான இவர், அதனைத் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
சன்டிவியின் பெரிய ஹிட் சீரியலான ரோஜா சீரியலில் வில்லி அனு கேரக்டரில் நடித்து வரும் விஜே அக்ஷையா கர்ப்பமாக உள்ள நிலையில், அவருக்கு வளைகாப்பு விழா நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன்.டி.வி.யின் பிரபலமான சீரியல்களில் முக்கியமானது ரோஜா. இந்த சீரியலில அனு ரோலில் என்ற முக்கிய நெகடீவ் கேரக்டரில் நடித்து வருபவர் அக்ஷையா.
சன்.டி.வியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமான இவர், அதனைத் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அக்ஷையா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் அக்ஷையா பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில், தனது 2-வது திருமண நாளை கொண்டாடிய அக்ஷையா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், இவருக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று ஆச்சரியமும் அடைந்தனர்.
இதனிடையே தற்போது அக்ஷையாவுக்கு வளைக்காப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அக்ஷையா, மகிழ்ச்சியுடன் வளைகாப்பு என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.