ரோஜா சீரியலில் நெகடீவ் ரோலில் நடித்து பிரபலமான நடிகை விஜே அக்ஷையா சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சன்டிவியின் பெரிய ஹிட் சீரியலான ரோஜா சீரியலில் வில்லி அனு கேரக்டரில் நடித்து பிரபலமானவர் விஜே அக்ஷையா.

சன்.டி.வியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமான இவர், அதனைத் தொடர்ந்து சீரியலில் வாய்ப்பு கிடைத்து நடித்தார்.

ரோஜா சீரியலில் இவரின் வில்லத்தனம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் பலரும் அவருக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்து வந்தனர்.

ஆனாலும் தனது நடிப்புக்காக தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ள விஜே அக்ஷையா தான் கர்ப்பமாக இருந்த காலக்கட்டத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலானது.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அக்ஷையா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் அக்ஷையா பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வித்தியாசமாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“