Advertisment

அர்ச்சனா ஆட்டம் க்ளோஸ்? ராஜா ராணி-2 சீரியல் முக்கிய திருப்பம்

Tamil Serial Update : தனது வில்லத்தனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்புகளை சம்பாதித்த அர்ச்சனா தற்போது இந்த சீரியலில் இருந்து வெளியேற உள்ள செய்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
அர்ச்சனா ஆட்டம் க்ளோஸ்? ராஜா ராணி-2 சீரியல்  முக்கிய திருப்பம்

Tamil Serial Raja rani 2 Update In tamil : விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. முதல் சீசன் வெற்றியை அடுத்து தொடங்கப்பட்ட இந்த 2-வது சீசனில் சித்து ஆல்யா மானசா ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துவந்தனர். இடையில் ஆல்யா மானசா கர்ப்பமானதால் அவர் சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகினார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து அறிமுக நடிகையாக ரியா என்பவர் தற்போது ஆல்யா மானசாவின் சந்தியா கேரக்டரில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் கடந்த சில எபிசோடுகளாக பெரியஎதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் அர்ச்சனாவுக்கும் சந்தியாவுக்கு இடையே நடக்கும் பனிப்போர்தான்.

பார்வதியின் திருமணத்தை நிறுத்த அர்ச்சனாவும், இந்த திருமணத்தை எவ்வித பிரச்சினையும் இல்லாமல் நடத்த சந்தியாவும் எடுத்துக்கொண்ட முயற்சியில் சந்தியா வெற்றி பெற்றார். தற்போது பார்வதியின் திருமணம் வெற்றிகராமாக முடிந்துவிட்டாலும், அவரின் முன்னாள் காதலனான விக்கியின் அப்பா தற்போது பார்வதியை கடத்திவிட்டார்.

இதனால் அடுத்து என்ன நடக்கும், இந்த பிரச்சினையை சந்தியா எப்படி எதிர்கொள்ளபோகிறார். இந்த கடத்தல் சம்பத்தில் அர்ச்சனா என்ன செய்ய போகிறார் என்று பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது சீரியலில் அதிரடி திருப்பம் அரங்கேறியுள்ளது. இதில் மெயின் வில்லியாக அர்ச்சனா ரோலில் நடித்து வந்த விஜே அர்ச்சனா தற்போது இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

publive-image

தனது வில்லத்தனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்புகளை சம்பாதித்த அர்ச்சனா தற்போது இந்த சீரியலில் இருந்து வெளியேற உள்ள செய்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ராஜா ராணி 2 சீரியலில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக விஜய் டிவியின் விருதை வென்ற தற்போது இந்த விலகல் தகவலை கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment