Tamil Serial Actress Archana Lifestyle Update : தற்போதைய காலகட்டத்தில்சீரியல் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றனர். நாயகிகள் மட்டுமல்லாது நெகடீவ் ரோலில் நடித்து வரும் நடிகைகளும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அவர்கள் நடித்து வரும் சீரியலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் ராஜா ராணி 2.
சித்து ஆல்யா மானசா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியலில் அவர்களுக்கு இணையாக வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. இவர் செய்யும் வில்லத்தனத்திற்கு ரசிகர்கள் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்தாலும் அவரின் கேரக்டருக்கு ரசிகர்கள் தரும் பாராட்டாகவே இது பார்க்கப்படும். இதனால் அந்த விமர்சனங்கள் முழுவதும் அவருக்கு கிடை்த்த பாராட்டுக்கள் என்றே கூறலாம்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையை சேர்ந்த அர்ச்சனா சென்னையிலேய தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இவரது தந்தை கல்லூரி பேராசிரியர். இன்ஜியனியரிங் முடித்துள்ள அர்ச்சனா சினிமா மீதுள்ள ஆர்வத்தினால், டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாயிலாக தனது நடிப்பு திறமையை வெளியிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் பிரபலமான அவருக்கு முதல்முறையாக ஆதித்யா டிவியில் ஆங்கரிங் வாயப்பு கிடைத்துள்ளது.
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அர்ச்சனா தனது குரல்வளத்தின் மூலம் சிறப்பாக வரவேற்பை பெற்றார். தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் கவனம் செலுத்தி வந்த அர்ச்சானவுக்கு இன்ஸ்டா வீடியோ மூலம் விஜய் டிவியின் சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சீரியல் வாய்ப்பையும் நன்றாக பயன்படுத்திக்கொண்ட அர்ச்சனா தற்போது சீரியல் வில்லியாக தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களையும் பெற்றுள்ளார்.
ஓய்வு நேரங்களில் தனது குடும்பத்துடன் செலவிட்டு வரும் அர்ச்சனா, விஜய் டிவியின் முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா, கில்லாடி ராணி உள்ளிட் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். தற்போது சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமாக இருக்கும் அர்ச்சனா தொலைக்காட்சிக்கு வரும் முன்பே விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil