/tamil-ie/media/media_files/uploads/2023/01/VJ-Archana.jpg)
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனாவான நடித்து வந்த விஜே அர்ச்சனா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/VJ-Archana-2.jpg)
நிகழ்ச்சி தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமான விஜே அர்ச்சனா, ஏராளமாக குறும்படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியல் அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/VJ-Archana-3.jpg)
சிவகாமி குடும்பத்தின் 2-வது மருமகள் அர்ச்சனா கேரக்ட்டரில் நடித்த விஜே அர்ச்சனா தனது சிறப்பாக நடிப்பின் மூலம் பாராட்டுக்களை பெற்றிருந்தார். இவரின் வில்லத்தனம் நல்ல வரவேற்பை பெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/VJ-Archana-5.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/01/VJ-Archana-1.jpg)
தொடர்ந்து சீரியலில் சிறப்பாக நடித்து வந்த விஜே அர்ச்சனா திடீரென ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அறிவித்தபடி சீரியலில் இருந்து விலகிய இவர் தற்போது வெப் தொடர்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/VJ-Archana-6.jpg)
மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிடும் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/VJ-Archana-7.jpg)
அந்த வகையில் அர்ச்சனா தற்போது போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.