விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த வரிசையில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் ராஜா ராணி 2.

ஆல்யா மானசா சஞ்சீவ் நடித்த ராஜா ராணி முதல் சீசன் வெற்றிகராமாக முடிந்த நிலையில், ஆல்யா சித்து நடிப்பில் 2-வது சீசன் தொடங்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சீரியலில் வில்லி அர்ச்சனா என்னும் கேரக்டரில், நடித்து வந்தவர் விஜே அர்ச்சனா. சைலண்டாக இவர் செய்யும் வில்லத்தனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

ஆனாலும் சமீபத்தில் இவர் தொடரில் இருந்து வெளியேறினார். தனிப்பட்ட காரணங்களுக்காக இவர் தொடரில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்பட்ட நிலையில், திருமணம் காரணமாகவும் வெளியேறியதாக தகவல் வெளியானது.

சிறுவயது முதல் ஆங்கராக ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் இருந்த அர்ச்சனா, ஆதித்யா தொலைக்காட்சியின் மூலம் விஜேவாக களமிறங்கினார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புகழ்பெற்று பிரபலமான இவர், விஜய் டிவியில் ஒளிப்பரப்பான நீயா நானா ஷோவில் பங்கேற்றுள்ளார்.

அதன்பிறகு பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக இவருக்கு ராஜா ராணி 2 தொடரில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது சீரியலில் இருந்து விலகியுள்ள அவர், வெப் சீரிஸில் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில், சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil